டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிப்பில் “ஸ்டிரைக்கர்” திரைவிமர்சனம்

140

தமிழ் பட திரை உலகில் டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராபர்ட் அவரது நடிப்பில் ஸ்டிரைக்கர்,மற்றும் வித்யா பிரதீப், ஜஸ்டின் விஜய், கஸ்தூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதையின் நாயகன் ஜோஷி இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்த்து முடிப்பதற்குள். அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர், அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரிலிருந்தவர்கள் இறந்துவிடுகின்றனர்,அதை நினைத்து ஜோஷி வருந்திக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் அமானுஷியமான விஷயங்களை பற்றி சொல்கின்றனர்.

அமானுஷிய விஷயங்கள் மேல் ஆர்வம்கொண்ட இவர் அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார்,அப்படி ஒருநாள் அவரின் காதலிக்கு அமானுஷிய சம்மந்தமான உதவி செய்ய செல்கிறார். அப்போது அங்கு எதிர்பாராத சம்பவம் நடக்கிறது,

அந்த சம்பவத்தினால் ஒரு பிரச்சனையில் ஜோஷியும் , அவரின் காதலியும் மாட்டிக்கொள்கின்றனர். கடைசியில் அந்த பிரச்னையிலிருந்து இவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

திரைப்படத்தில் ராபர்ட் இன் கதாபாத்திரம் சுவாரசியமானது.வித்யா பிரதீப் மிக அழகாக உள்ளார் இப்படத்தில் அவர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக நடித்துள்ளார்.

சிறிது நேரமே வந்தாலும் கஸ்தூரி கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தவை அவர் கொடுத்த வேலையை செய்துள்ளார்.ஜஸ்டின் விஜய் நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.பேக்ரவுண்ட் இசை மிரட்டியுள்ளார்,ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் ஆகவே திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.பேய் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு‌ இத்திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.