“ரிப்பப்பரி” திரைவிமர்சனம்

150

இயக்குனர் நா அருண் கார்த்திக் இயக்கி தயாரித்துள்ள படம் தான் ரிப்பப்பரி…

இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன், ஆர்த்தி, காவியா அறிவுமணி, சீனிவாசன், நோபல் கே.ஜேம்ஸ் , மாறி மற்றும் பல நடித்துள்ளனர்…

ரிப்பப்பரி படத்தின்  கதை தான் என்ன…

கோவை தலைக்கரை கிராமத்தில் ஜாதி மாறி திருமணம் செய்யும் ஆண்களை ஜாதி வெறி பிடித்த பேய் ஒன்று கொலை செய்வதாகவும் அது தலையை மட்டும்  வெட்டி போட்டுவிட்டு உடலை எடுத்துக் கொண்டு செல்கிறது…

பேய் கொள்ளும் ஆண்களில் நம் மாஸ்டர் மகேந்திரனின் நண்பனும் ஒருத்தர் அப்போது மகேந்திரனும் அவருடைய நண்பர்களும் போலீசில் பிடிப்பட போலீஸ் மகேந்திரனிடமும் அவர்கள் நண்பர்களிடமும் இந்த கொலையை செய்யும் அந்த பேயை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று  சொல்லும் இடத்தில்தான் இந்த படத்தின் லாஜிக் மிரல் ஆரம்பிக்கிறது…

அவ்வளவு போலீஸ்காரர்கள் இருக்கும்பொழுது ஏன் இந்த மூவரை கண்டுபிடிக்க சொல்கிறார்கள் என்பதுதான் மீதி கதை…

ஐயோ இருங்க இருங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் இதுல நம்ம மாஸ்டர் மகேந்திரனும் அவருடைய இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஒரு குக்கிங் சேனல் youtube சேனல் ஆரம்பிக்கிறாங்க அந்த youtube சேனல்ல கமெண்ட் செக்சன்ல ஒரு பொண்ணு கமெண்ட் பண்ண அந்த பொண்ண லவ் பண்ண ஆரம்பிக்கிறாரு. நம்ம ஹீரோ மாஸ்டர் மகேந்திரன்…

சரி இப்ப மீதி கதைக்குள்ள போலாம்…

அந்த ஹீரோயின் இருக்க ஊரும் அந்த பேய் இருக்கு ஊரும் ஒன்னு தான் தெரிஞ்சுக்கிட்டு நம்ம ஹீரோ அந்த கிராமத்துக்கு போக முடிவெடுக்கிறாரு அந்த கிராமத்துக்கு போயி இவரு ஹீரோயினை தேட இவங்க ரெண்டு நண்பர்களும் சேர்ந்து பேயதேட ஆரம்பிக்கிறாங்க…

அந்த பேய கண்டுபிடிக்க போலீஸ்காரர் ஒரு பொம்மையை கொடுத்து அனுப்புகிறார். அந்த குரங்கு பொம்மைகுள்ள ஒரு போலீஸ் நாயோட ஆவி இருக்கணும் அது பேய  பார்த்தா மோளம் அடிக்கும் அப்படின்னு சொல்றாரு…

அந்த பேயா நடிச்சிருக்காரு ஸ்ரீனிவாசன் ஒரு ஆர்டிஸ்ட் இவர் ஆல்ரெடி டிரைவர் ஜமுனா  படத்துல நடிச்சவரு. இவர் நடிப்பு அட்டகாசமோ அட்டகாசம்  அந்த பேய்க்கு ஒரு ஃபிளாஷ்பேக் வர அந்த ஃப்ளாஷ் பேக்ல காவியா நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ்ல முல்லையா நடிச்ச காவியா அவங்கள லவ் பண்ண இவங்க ரெண்டு பேரும் என்ன ஆனாங்க ஏன் இவர் பேயானார் அப்படின்றது தான் மீதி கதை.

இதை கண்டுபிடிச்சு அந்த பேய துரத்துறாங்களா மாஸ்டர் மகேந்திரன் அவர் லவ் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறாரா இல்ல அவரும் இறக்கிறாரா இதுதான் மீதி கதை…

கதையை பொருத்தவரைக்கும் ஏதோ வித்தியாசமா ட்ரை பண்ணி இருக்காங்க ஆனா அது வந்து சரியான ஸ்கிரீன் பிளே இல்லாததால் காமெடி எடுபடாதளையும் படம் கொஞ்சம் டவுன் ஆயிடுச்சுன்னு சொல்லலாம்..

தயவுசெய்து மாஸ்டர் மகேந்திரன் இனி இந்த காதல் , காமெடி இப்படியெல்லாம் நடிக்காம ஒரு ஆக்சன் மூவில நடிக்கலாம்னு நினைக்கிறோம். இந்த படத்துல அவரை பார்க்கும்போது அருண் விஜய் ஓட தோற்றம்  போல் தெரிகிறது…

பேய் ஜானர் படங்கள் எத்தனையோ நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு படத்தை நாம் பார்த்திருக்கவே முடியாது. அப்படி ஒரு ஜானர். படத்தின் காட்சிகள்  நம்மை மறந்து சிரிக்க வைத்தாலும், நம்பவே முடியாத கதையும், கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லாத திரைக்கதையும்  இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்……

மொத்தத்தில் இந்த ரிப்பபரி ஒரு வித்தியாசமான கதை அப்படின்னு சொல்லலாம் பாத்தா இது ஒரு கதை  அவ்வளவுதான்…