ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளியாகி இருக்கும் “அகிலன்” திரை விமர்சனம்
துறைமுகத்தில் நடக்கும் கடல் வழி போக்குவரத்து, சட்டவிரோத வியாபாரம் ,சரக்கு போக்குவரத்து பற்றி படம் துவங்குகிறது.
ஜெயம் ரவியை வட சென்னை ஆளாக தனது படத்தில் காட்டியிருப்பார். அதே இயக்குநருடன் மீண்டும் கை கோர்த்துள்ளார், ஜெயம் ரவி,கடல் வழி கடத்தல்களில் ஈடுபடும் நாயகனாக படத்தின் ஆரம்பத்திலேயே பதிந்து விடுகிறார் ஜெயம்ரவி

கதையாக ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார் இயக்குநர், பிரியா பவானி சங்கருக்கு ரெமான்ஸ் காட்சி இல்லை என்றாலும் பெண் போலிஸ் அதிகாரியாக வலம்வந்து கலக்கியிருக்கிறார்.
காமெடி காட்சிகள் பெரியதாக இல்லை, அது பெரிய குறையாக தெரியவில்லை, கதைக்கு ஏற்றவாறு, சாம் சி.எஸ்சின் இசையும் ஈடு கொடுத்து மெருகேற்றியுள்ளது.

மற்ற படங்களிடமிருந்து அகிலன் வேறுபடுவது, அதன் திரைக்கதையினால், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கமர்ஷியல் படத்தை பார்த்த உணர்வினை தருகிறது.
துறைமுகத்தில் நடக்கும் ஊழல்களையும், சரக்கு கப்பல்களால் நமக்கு ஏற்படும் விலைவாசி உயர்வுக்கான காரணங்களையும், விளக்கி கூறி,அரசியலை அகிலன் படம் மூலம் காட்டியிருக்கிறார்
மொத்தத்தில் அகிலனை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று ரசித்து பார்க்கலாம்