விருஷ்பாக்ஷா படத்தின் விமர்சனம்…
பிரபல இயக்குனர் சுகுமாருடன் இணைந்து இப்படத்தை கார்த்திக் வர்மா தண்டு எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்
இதில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன், சுனில், ராஜீவ் கனகலா, பிரம்மாஜி மற்றும் ரவி கிருஷ்ணா ஆகியோர் நடிச்சிருக்காங்க
குறிப்பாக சம்யுக்தா மேனனின் நடிப்பும் பாராட்டத்தக்கது
அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இல்ல மொத்த காட்சியிலும் முத்தாட்சியிலும் பரந்து பறந்து அமானுஷ்ய சக்தி வெளிப்படுத்துவதிலும் அதிரடியாக நடித்திருக்கிறார் சம்யுக்தா
படத்தின் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவைப் பாராட்டியே ஆகவேண்டும்,இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்
சாய் தரம் தேஜ் ஒரு நல்ல மறுபிரவேசத்துடன் வந்து உள்ளார்,காதல் நாயகனா வந்து போனாலும் இடைவேளைக்கு பின் 8 மணி நேர கெடுவில் கதாநாயகியை காப்பாற்றத் துடிக்கும் கச்சிதமாக நாயனாக மின்னி இருக்கிறார்
இப்படத்தின் தமிழ் நாடு உரிமை யை வாங்கி ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ளது,
இந்த படத்தில் கதை என்ன வாங்க பார்க்கலாம்,1979 ஆம் ஆண்டு, ருத்ரவனம் கிராமத்தில், வெங்கடாசலபதி தனது வீட்டில் ஒரு பூஜை நடத்துகிறார் சூனியம் செய்வதாக நினைத்து கிராம மக்கள்வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது மனைவியையும் எரித்து விடுகிறார்கள்,
அன்றிலிருந்து பன்னிரண்டாம் ஆண்டில் கிராமம் அழிந்துவிடும் என்று சலபதியின் மனைவி ஒட்டுமொத்த கிராமத்தையும் சபிக்கிறாள்.
அவர்களின் மகன் பைரவா, கிராம மக்களால் ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறார், அவர் பழிவாங்குவதையும் மந்திரங்களை உச்சரிப்பதையும் தொழிலாகவாழ்கிறார் சாவுக்கு அவர்தான் காரணமா?
படத்தின் ஆரம்பத்தில்
1991 ஆம் ஆண்டில், ஒரு கிராமவாசி ஒரு காகத்தால் தாக்கப்பட்டு, மயக்க நிலையில் காட்டுக்குள் நடக்கத் தொடங்கும் திகிலோடு படம் ஆரம்பமாகிறது
12 வருடங்கள் கழித்து குடும்பத்துடன் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது கிராமத்திற்கு திரும்புகிறார் நாயகன் சூர்யா.
அவன் வரும்பொழுது காரின் மீது ஒரு காகம் பட்டு இறந்து விடுகிறது,அது சூர்யாவுக்கு அபத்தமான சகுனமா,காகம் தாக்கியகிராமவாசி இறந்த பிறகு கிராமம் கோயில் பூட்டப்பட்டு கிராமமே அல்லோகலப்படுகிறது
கிராம பூசாரி 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவை விதிக்கிறார், அங்கு யாரும் கிராமத்திலிருந்து வெளியேசெல்லக்கூடாது, என்றுஅந்த ஊரைச் சேர்ந்த சுதா காதலனுடன் வெளியேறுகிறார் இது தெய்வ குத்தமாகிறது,அவருடைய காதலன் என்ன ஆனார் அந்த காதலன் யார்
சூர்யா காதலிக்கும் நந்தினி யார் நந்தினி எந்த வித நோயால் பாதிக்கப்படுகிறார் அவரிடம் இருக்கும் மர்மம் என்ன,இதெல்லாம் படத்தில் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம்
மேலும் பலர் சங்கிலி எதிர்வினையில் இறக்கத் தொடங்குகிறார்கள்.இது சாபமா பாவமா அமானுஷ்ய சக்தியா இருந்து போன அந்த பைரவாவின் குடும்பத்தில் விட்ட சாபமா
என்று இப்படி கேள்வி மேல் கேள்வி படத்தில் எழுகிறது எல்லாவற்றுக்கும் பதில் கிளைமாக்ஸ் காட்சி சரியாக வைத்திருக்கிறார் இயக்குனர்
சூர்யா விசாரிக்கத் தொடங்குகிறார்,
அப்படி விசாரிக்க தொடங்கும் பொழுது பல உண்மைகள் தெரிய வருகிறது படத்தின் பல முடிச்சுகள் அவிழ்கிறது ஒவ்வொன்றாக அவிழ அவிழ நமக்கும் ஷாக் அடிக்க வைக்கிறது படம்
இப்படி படம் முழுவதும் போலீஸ் கேள்விக்கணைகளால் நம்மை திகைக்கு விட்டு ஆச்சரியமான பாதைக்கு அழைத்து செல்கிறது திரைக்கதை
இனி மீதி கதை
படம் பார்க்கும் பொழுது ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்வீர்கள் அந்த கிராமத்திற்குள் நாமே நுழைந்து விட்டோம் என்று நமக்கு தோன்றும் அப்படி ஒரு பரபரப்பான திரைக்கதையை இயக்குனர் சுகுமார் தந்திருக்கிறார் இசை படத்துக்கு பலம் ஒளிப்பதிவு இருட்டில் மிரட்டுகிறது
படத்துக்கு தேவையான சிஜி கலர் கரெக்ஷன் மற்றும் காட்சி அமைப்புகள் ஒரு தரமான படத்திற்கு இணையாக இருக்கிறது
படத்தின் இயக்குனர் சொல்ல வந்ததை நன்றாக சொல்லியுள்ளார் திகில் ஊட்டும் காட்சிகள் நிறைய இருக்கிறது அதே சமயம் அடுத்து என்ன நடக்கிறது நடக்கப்போகிறது என்பதையும் திரைக்கதையில் புகுத்தி விறுவிறுப்பாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது
முத்தத்தில் முடியும் இந்த காதல் சாம்ராஜ்யம் மொத்தத்தில் உங்களை கவரும் அருந்ததி அம்மன் போன்ற பட வரிசையில் விருஷ்பாக்ஷா