பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் இந்த ஹனுமான் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்துடன் ஹனுமான் படம் மோதியிருக்கிறது. பான் இந்தியா படம் போல பல மொழிகளில் டப் செய்யப்பட்டுருக்கிறது ஹனுமான் தமிழில் மெகா பெரிய வரவேற்பை பெரும் படமாக அமையும்,ராமர் படத்தில் மிகபெரியபலமாக இருக்கிறார்கள்.

ஹனுமான் சக்தியோடு வில்லனை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் சுவாரஸ்ய கதை
அஞ்சனாத்ரி எனும் கிராமத்தில் ஹனுமந்தா எனும் கதாபாத்திரத்தில் தேஜா நடித்துள்ளார்,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார், வில்லனாக வரும் வினய் உள்ளிட்டோரின் நடிப்பு படத்திற்கு மேலும் ஒரு மெருகூட்டல்

ஆன்மிகத்தை கலந்து சூப்பர் ஹீரோ கதையில் வியாபாரரீதியாக திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்,சூப்பர் ஹீரோவாக ஆசைப்படும் வில்லன் மற்றும் அம்ரிதா அய்யருடன் காதல் காட்சிகள் காமெடி என்று மசாலாக்கள் நிறைத்திருக்கின்றது.
CG வடிவமைப்பு காட்சிகள் மிரளவைத்து பிரம்மிக்க வைத்துள்ளன. ஆதிபுருஷ் படத்தை விட CG தத்ரூபமாக இடம்பெற்று இருக்கும் கிளைமேக்ஸில் 20 நிமிட காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்

ஹனுமான் 50 கோடி பட்ஜெட்டில் 1000 கோடி பட்ஜெட் படத்தை பின்னுக்கு தள்ளும் வித்தியாசமான கதையம்சமாக கொண்ட படமா இருக்கிறது
பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலை அழகிய கிராமம் என்ன சொல்லிக்கொண்ட போகலாம் இந்த பொங்கலுக்கு இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளும் படமாக ஹனுமான் இருக்கும்