அறிமுக நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா, ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம்
“சிக்லெட்ஸ்”ஸ்ரீமன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முந்தைய தலைமுறையினரைப் போல் அல்லாமல் தம் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுகிற் அல்லது செய்கிற தலைமுறையாக இக்கால இளைஞர் கூட்டம் உள்ளதென்பதையும் அவற்றைப் பெற்றோர் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பேசியிருக்கும் படம் சிக்லெட்ஸ்.
அவர்களும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்தக் காலகட்டத்தின் உயர்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நடித்திருக்கின்றனர்.

பெற்றோர்களாக ஸ்ரீமன்,சுரேகாவாணி,ராஜகோபால் ஆகியோர், சுதந்திரம் கொடுக்காமல் இருக்கவும் இயலாது பிள்ளைகள் தடம்மாறி தடுமாறிப் போய்விடுவார்களோ என்கிற பதட்டத்திலேயே இருக்கும் இக்காலப் பெற்றோரின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
இன்றைய தலைமுறையில் 2k கிட்ஸ் இன் வாழ்வை மையப்படுத்தி எடுத்து உள்ளார் இயக்குனர்,சுரேகா வாணி கதாபாத்திரம் நன்றாக உள்ளது ஒரு தாயாக மகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு எடுத்துக்காட்டாக இப்படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீமனின் கதாபாத்திரம் அற்புதம் தன் தன்னுடைய பெண் ஒரு லெசிபின் என்று தெரிந்தும் அதை ஆதரித்து தன் மகளை ஏற்றுக் கொண்டு பிள்ளைகளின் மனதை புரிந்து கொண்ட அப்பாவாக வாழ்ந்துள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது,பாடல்கள் நன்றாக உள்ளது,ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக உள்ளது,குறையேதும் இல்லாமல் ஒரு நல்ல கருத்து உள்ள படத்தை இயக்குர் சிறப்பாக கொடுத்து இருக்கார்