“கார்பீல்ட்” 2024 திரைவிமர்சனம்

85

இயக்குனர் மார்க் டிண்டால் இயக்கத்தில் தி சிக்கன் லிட்டில் பட புகழ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் “The Garfield Movie” அனிமேஷன் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

ஜான் என்பரின் வீட்டில் Garfield எனும் பூனை சொகுசாக வாழ்கிறது,அதனுடன் ஓடி என்ற நாயும் சேர்ந்துக்கொண்டு சேட்டைகள் செய்கின்றன,அப்பாவை பிரிந்த கவலை இல்லாமல் சுதந்திரமாக வாழும் garfieldஐயும், ஓடியையும் இரண்டு நாய்கள் கடத்துகின்றன.

அதன் பின்னர் ஜின்க்ஸ் என்ற பூனை கொடுக்கும் டாஸ்கை garfield தனது அப்பா விக்குடன் சேர்ந்து முடிக்க வேண்டும்,Garfield அதனை செய்து காட்டியதா? ஜின்க்ஸ் ஏன் அந்த டாஸ்க்கை கொடுத்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

Garfiled-ஐ அதன் அப்பா விக் சிறுவயதில் விட்டு ஐசென்றதற்கான பிளேஷ்பேக் காட்சி நெகிழ்ச்சி,
மிஷன் இம்பாசிபிள் இன் பிஜிஎம் ஐ படத்தில் உபயோகித்துள்ளனர்,மிக அற்புதமாக காட்சிகளை இயக்குனர் காட்சி அமைத்துள்ளார்,தந்தை மகள் பாசத்தையும் இப்படத்தில் காண்பித்துள்ளார்,

இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான பிரத்தேக 3d யில் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது,இந்த விடுமுறைக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
அனைவரும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் கொண்டாடி பார்க்கக் கூடிய திரைப்படம்