தண்ணீர் ஒரு வியாபாரப் பொருளாக மாறிய பின்னர், அதை தொழிலாக நடத்தும் முதலாளிகள் வேலை செய்யும், அதனால் வரும் தொழில் போட்டி, வடசென்னை வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கிறது படத்தின் திரைக்கதை.
ஹீரோ துஷ்யந்த், ஜெயப்பிரகாஷ் மற்றும் கேப்ரில்லா பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் ஜெயவேல் முருகன் தண்ணீர் கேன் தொழிலை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்தது இப்படிலாம் நடக்குமா என்கிற அளவிற்கு இருந்தது, காதல், திருமணம்,மோதல் ஆகியவற்றை மையமாகக் வைத்து வழக்கமான கதைக்களமாக இல்லாமல் மிக சிறப்பாகவே படம் எடுத்திருக்கிறார்.
வில்லன் சங்கர்நாக் விஜயனின் வில்லத்தனமான நடிப்பு பாராட்டும் படியாக உள்ளது. அதேசமயம், துணை நடிகர்கள், ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன்,கதையின் நகர்வுக்கு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது மேலும் சிறப்பு

இசையமைப்பாளர் போபோ சசியின் இசை கதைக்கு ஏற்றபடி சரியாக இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் கேமரா ஒர்க்,எடிட்டிங் படத்திற்க்கு பிளஸ் ஸ்டண்ட் மாஸ்டர் சண்டை காட்சிகளில் மிரளவைத்து இருக்கிறார்.
கடைசியில் தொழில் போட்டிக்காக என்ன நடந்தது யாரெல்லாம் பாதிக்கப்பட்டர்கள் முடிவில் என்ன நடந்தது என்பதே மீதி கதை, வருணன் வருணபகவானையும் தண்ணீரையும் குறிக்கும் இந்த வருணன் லாப வெறிக்காக ரத்தம் கலந்த தண்ணீராக மாறியது.