“Don’t Trouble The Trouble” Movie Review – “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” திரைவிமர்சனம்

23

பணம் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சூரி, (ஃபஹத் பாசில்) பணக்காரர்களின் குழந்தைகளை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டமிடுகிறார். அப்படி ஒரு கடத்தலின் போது, தான் கடத்தியிருப்பது உயிருடன் இருக்கும் சிறுமி அல்ல, ஏற்கனவே இறந்துவிட்ட சாரா பாலேகரின் ஆன்மா என்பது அவருக்கே தெரியாமல் போகிறது. தன் மரணத்தை அறியாத சிறுமி, தொலைந்து போன பெற்றோரைத் தேடி சூரியின் உதவியை நாடுவதிலிருந்து கதை சுவாரஸ்யமான பாதையில் பயணிக்கிறது.

எதற்காக இந்த சிறுமி சூரிக்கு மட்டும் தெரிகிறாள்?அவளது பெற்றோர் எங்கே? என்ற கேள்விகளுடன் பயணிக்கும் திரைக்கதை, குழந்தைகளுக்கான ஃபேண்டஸியையும் பெரியவர்களுக்கான உணர்வுகளையும் ஒன்றாக கலக்க முயற்சிக்கிறது.

Don't Trouble the Trouble Movie Review: Big hype, but falls short of  expectations

சூரியாக வரும் ஃபஹத் பாசில், வழக்கமான ஹீரோ பிம்பத்தைத் தவிர்த்து, பேராசை, பயம், குழப்பம், பாசம் என பல்வேறு உணர்வுகளை முகபாவனைகளால் இயல்பாக கடத்துகிறார். சாரா பாலேகருடன் அவர் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக மாறுகின்றன. சாரா தனது இயல்பான நடிப்பால் குழந்தைத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, தான் ஆன்மா என்பதை அறியாமல் சுற்றி வரும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன.

Don't Trouble The Trouble Official Trailer | Latest Don't Trouble The  Trouble Trailers

படத்தின் முதல் பாதியில் வரும் மேஜிக், நகைச்சுவை மற்றும் ஃபஹத்–சாரா கூட்டணி நல்ல பொழுதுபோக்கை வழங்குகிறது. குழந்தைகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகளும், ஸ்னூபி நாய்க்குட்டியைச் சுற்றிய காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவு கற்பனை உலகத்திற்கு அழகான தோற்றம் கொடுக்க, கால பைரவாவின் இசை காட்சிகளின் உணர்வுக்கு துணை நிற்கிறது.

Don't Trouble the Trouble (2026) - Cast, Reviews & Showtimes

சுவாரஸ்யமாக தொடங்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் வேகம் குறைந்து, சில இடங்களில் நீளமாக நகர்வது படத்தின் அனுபவத்தை பாதிக்கிறது. இருந்தாலும், ஃபஹத் பாசிலின் நடிப்பும் சாரா பாலேகரின் குழந்தைத்தனமான வெளிப்பாடுகளும் படத்தை தொடர்ந்து ரசிக்க வைக்கின்றன.

குழந்தைகளின் கற்பனை உலகத்தையும், ஒரு எதிர்பாராத ஆன்மா பயணத்தையும் நகைச்சுவையுடன் சொல்லும் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’, முழுமையான திருப்தியை தராவிட்டாலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு மென்மையான ஃபேண்டஸி அனுபவமாக நிற்கிறது.

Don't Trouble the Trouble Review | 'Don't Trouble the Trouble' Movie Review

‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ – ஆன்மாவுடன் ஒரு கலகலப்பான பயணம்