“Haiku” Movie Review – “ஹைக்கூ” திரைவிமர்சனம்

4

உணர்வுகளை அழகாகப் பேசும் ‘ஹைக்கூ’ திரைப்படம், காதல், பிரிவு, மீண்டும் மலரும் காதல் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது. காதலர்கள் மட்டுமின்றி, தம்பதிகளும் புரிந்துகொள்ள வேண்டிய ஆழமான உணர்வுப்பூர்வமான செய்தியை இப்படத்தின் மூலம் இயக்குநர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். மனித மனங்களின் உணர்வுகளையும், உறவுகளின் நுட்பங்களையும் வலுவான திரைக்கதையின் வழியே வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

ஏகன், ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், நாயகனின் காதல் பயணமும், கடந்த கால உறவின் தாக்கம் தற்போதைய காதல் ஆகியவற்ற இயக்குநர் யுவராஜ் அழகாக கையாண்டு இருக்கிறார்.

ஏகன், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, அதற்கேற்ற நடிப்பை வழங்க வழங்கி இருக்கிறார். ஸ்ரீதேவி அப்பல்லா, ஃபெமினா ஜார்ஜ் இருவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரங்கள் ஆழமாகப் பதியும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்து, கதையின் சீரான நகர்வுக்குத் துணைபுரிந்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது சித்து குமாரின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் காதலின் இனிமையையும், பிரிவின் வலியையும் பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாகக் கடத்துவதில் சிறப்பாகப் பங்களித்துள்ளன. படத்தொகுப்பு கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்து, ஒளிப்பதிவில் கூடுதல் பலம்.

காதல், பிரிவு, புதிய உறவு என ஏற்கெனவே பரிச்சயமான உணர்வுகளின் வழியே பயணிக்கும் ‘ஹைக்கூ’, இறுதிக்கட்டத்தில் உறவுகளின் உண்மையான அர்த்தத்தைப் பேசுகிறது எந்த படம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும், மனதில் இருப்பதைத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்வதும் ஒரு உறவை எவ்வாறு காப்பாற்றும் என்பதை உணர்த்தும் விதத்தில், கிளைமாக்ஸ் பாராட்டுக்குரிய ஒன்று.

மொத்தத்தில், காதலும் கலகலப்பும் கலந்து கவனம் ஈர்க்கும் ‘ஹைக்கூ’, காதலர்களின் மனதைத் தொடும் சிறந்த திரை அனுபவமாக அமைந்துள்ளது.

ஹைக்கூ – இசையில் மனதைத் தொடும் ஒரு காதல் காவியம்