“Aalan” Movie Review “ஆலன்” திரைவிமர்சனம்

196

படத்திற்க்கு படம் வித்தியாசமான மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி இதிலும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் கதைக்குள் செல்வோம் : விபத்து ஒன்றில் குடும்பத்தை இழந்த வெற்றி, காசிக்கு சென்று ஆன்மீக வாழ்கை வாழ விரும்புகிறார் நினைக்கிறார்.

பல வருடங்களாக முயற்சித்தும் மனம் அடங்காது ஆன்மீகத்தை ஆட்கொள்ள மறுக்கிறது. எழுத்தாளராக ஆகவேண்டும் என்று காசியை விட்டு தனது பயணத்தை தொடங்குகிறார். அப்போது  அவருக்கு ரயில் பயணத்தில் கிடைக்கும் ஒரு ஜெர்மனி நாட்டு பெண்னின் நட்பு, வாழ்க்கையை மாற்றுகிறது. மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை எதிர்கொள்கிறார். அடுத்து அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் வெற்றி அசாதாரமாண நடிப்பில் துறவியாக நடித்து இருக்கிறார், நடிகை அனு சித்தாராவின் அழகிய கவர்ச்சி நடிப்பு சிறப்பு , ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நேசிக்கும் பெண்ணாக மிகவும் நன்றாக நடித்து இருக்கிறார்

விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என்ன பலரும் நடித்து இருக்கிறார்கள் அவர் அவர் கதாபாத்திரத்தை சிறப்பாக  நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்,கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் கடவுளையும் காதலையும் ஒரு புதிய படைப்பில் தரமுயற்சித்து வெற்றி பெற்று இருக்கிறார்,மனோஜ்  கிரியானாவின் பாடல்களும், பின்னணி இசையும்  படத்திற்க்கு மிக பெரிய பலம், ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின் பல கட்சிகளை மனதில் நிறுத்தியிருக்கிறார்,மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங் அருமை.

ஆன்மிகவாதியாக மாற நினைத்தவர் வாழ்கை காதல்,எழுத்தால் எப்படி திசை மாறுகிறது என்பதை இயக்குனர் ஒரு புதிய பரிமாணத்தில் தரமுயற்சி செய்து இருக்கிறார்

மொத்தத்தில், “ஆலன்” கடந்து செல்ல முடியாத ஒரு பயணத்தை ஏற்படுத்தும்.