418-ம் எண் அறையில் நிகழ்ந்த கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தக் கட்டிடம் மூடப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர் விடுதியாக மாறும் அந்தக் கட்டிடத்தில், பூட்டப்பட்ட அறையைச் சுற்றி நிகழும் அமானுஷ்ய சம்பவங்களும், அவற்றின் பின்னணியில் இருக்கும் மர்மமும் என்ன என்பதே ‘418’ படத்தின் கதை.
ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன் இருளையும் குறைந்த வெளிச்சத்தையும் கையாண்ட விதம் திகில் சூழலை வலுப்படுத்துகிறது. வெங்கி.ஜி.ஜி.யின் பின்னணி இசையும், அகுல் அவினாஷின் படத்தொகுப்பும் மர்மத்தைத் தொடர்ந்து தக்கவைக்க உதவுகின்றன.
இயக்குநர் கிருத்தன் நடகவுடா, வழக்கமான பேய் படங்களிலிருந்து சற்று விலகி, உளவியல் பாதிப்புகளையும் அமானுஷ்ய மர்மத்தையும் இணைத்துக் கதை சொல்லியிருப்பது படத்தின் பலம்.
மர்மமான அறை, அச்சமூட்டும் காட்சிகள், சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் இசை மூலம் திகில் ரசிகர்களைக் நிச்சயம் கவரும் ‘418’
418 – அச்சத்தையும் மர்மத்தையும் இணைக்கும் திகில் பயணம்