பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் வித்தியாசமான ஆக்ஷன் கதையை சூப்பர் கமர்ஷியல் படமாக திரைக்கதையில் விறுவிறுப்புக்கு குறையில்லாமல் வெளிவந்துருக்கும் திரைப்படம் “அக்யூஸ்ட்”
குற்றவாளியான ஹீரோ உதயா எம்.எல்.ஏ ஒருவரை கொலை செய்கிறார் நீதிமன்றத்திற்கு போகும் வழியில் சில பிரச்சனை ஏற்படுகின்றது, போலீஸ் அதிகாரியும் கூலி படை கும்பலும் உதயாவை கொலை செய்ய திட்டம் செய்கின்றனர். உதயாவிற்கு உதவும் நோக்கத்தில் செயல்படும் மற்றொரு போலீஸ் அதிகாரி அஜ்மலும் அந்த கும்பல் பிடியில் சிக்குகிறார்.
ஹீரோ உதயா மற்றும் போலீஸ் அதிகாரி அஜ்மலை அந்த கும்பல் கொலை செய்தார்களா ? இல்லை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்களா என்பதே மீதி கதை.
எம்.எல்.ஏவின் கொலைக்கான பின்னணியும், தொடர்புடைய நாயகனின் பின்னணியும் அதற்கான காரணத்தையும் திரைக்கதை மூலம் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.
காதல், நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருக்கும் உதயா, கணக்கு என்ற ரவுடி யாகவே வாழ்ந்து இருக்கிறார் தோற்றத்திலும் நடிப்பிலும் அவரது மெனக்கெடல் மேலும் வெற்றியை அவருக்கு தரும்.
அஜ்மல் நிஜ போலீஸ் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார் உடல் வகுவிலும் பேச்சிலும் நல்ல நடிப்பை காட்டியிருக்கிறார்
எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் பவன், நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா காளக்கேரி, நாயகி சாண்டிகாவின் நடிப்பிலும் சற்றும் குறையில்லை.
யோகி பாபு சிரிக்கமட்டும் இல்லை சிந்திக்கவும் வைக்கும் அளவிற்கு சிறப்பாகவே நடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ, நரேன் பாலகுமாரின் இசை, படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவின் படத்தொகுப்பு என அனைத்துமே படத்திற்கு கூடுதல் பலம்.
குறை இல்லாத குற்றவாளியாக “அக்யூஸ்ட்”இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.