இயக்குநர் விஜயசேகரன்.எஸ் இயக்கத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களை பற்றி சமூக நலனுடன் மிகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கிறார். திரைப்படத்திற்கு தேவையான கமர்ஷியல் தேவையுடன் காதல், ஆக்ஷன், பாடல், காமெடி கையாண்டு இருக்கிறார்.
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை தேடி பிடித்து ஹீரோ சரத் நபி நந்தியும், கொலை செய்கிறார்கள். அந்த கும்பலை போலீசாரும் தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையில் தோழி மீது காதல் ஏற்பட்டது அதை வெளியில் சொல்லமுடியாமல் தவிக்கிறார். எதற்காக கொலை செய்தார்? காதலித்த தோழியை கரம்பிடித்தாரா? பின்னணியில் யார் இருக்கிறார்கள் இறந்த பிறகும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பெண்களின் நிலை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எப்படி நடந்தது என்பதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் என்பதே “போகி” கதை.
பழங்குடி இன பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களும் உடல் மற்றும் மன ரீதியான பாதிக்கப்பட்ட பெண்ணாக மிகவும் திறமையாக கதையின் கருவாக நடித்து இருக்கிறார் ‘சுவாசிகா’
பூனம் காவுர், வேல ராமமூர்த்தி, வில்லன் நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் மலை கிராம மக்களின் உணர்வுகளையும் வலிகளையும் கண்முன்னே காட்சி அமைப்பில் முன்னிறுத்தியிருக்கிறார்.
கவிஞர் சினேகன் வரிகளில் சற்றும் குறை இல்லாத இசையை கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் மரியா மனோகர், வசனம், ஸ்டண்ட், படத்தொகுப்பு கூடுதல் பலம்.
குறைகளை மட்டுமே பார்க்காமல் சமூகம் மீதுள்ள அக்கறையால் பல பாலியல் உண்மைகளை போட்டுடைக்கும் இயக்குனர் தயாரிப்பாளர் படக்குழுவினரை மனதார பாராட்டலாம்.
போகி குப்பைகளை மட்டும் எரிக்கவில்லை கேவலமான சில மனிதர்களையும் சாம்பலாக இருக்கின்றது எரிகின்றது.