“Chennai Files – Muthal Pakkam” Movie Review – “சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” திரைப்பட விமர்சனம்

அனிஷ் அஷ்ரப் இயக்கத்தில் நாயகன் வெற்றி நாயகி சில்பா மஞ்சுநாத் நடிப்பில் சைக்கோ திரில்லர் கதை அம்சத்துடன் பெண்களுக்கு ஏற்படும் சமூக குற்றங்களை சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

பத்திரிகை ஒன்றில் தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத விரும்பும் வெற்றி கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.தொடச்சியாக இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்தால் வெற்றி தவிர்க்க முடியாத திரை ஆளுமையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. நாயகன் வெற்றி நடிப்பு மற்ற படங்களை விட இப்படத்தில் மிகவும் சிறப்பு.

ரிப்போர்ட்டராக சில்பா மஞ்சுநாத் நடிப்பு மிகவும் சிறப்பு வழக்கமான நாயகியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரம் அவருக்கு கிடைத்து இருக்கிறது. அனைவரும் பாராட்டும் படியே நடித்து இருக்கிறார்.

பெண் நிருபர்,பள்ளி மாணவர்களும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள், கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க போராடும் வெற்றி எப்படி கண்டுபிடிக்கிறார்? அவர்கள் யாரால் கொலை செய்யப்படுகிறார்கள்? என்பதே மிதி கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தம்பி ராமையா, வில்லனாக நடித்திருக்கும் மகேஷ் தாஸ், காமெடிக்கு ரெடின் கிங்ஸ்லி என்ன அனைவரின் நடிப்பும் சிறப்பு. திரைக்கதைக்கு தேவையான இடங்களில் அவர்களை இயக்குனர் பயன்படுத்திய விதம் அருமை.

ஏ.ஜே.ஆர் இசை, அரவிந்தின் ஒளிப்பதிவு, விஷாலின் படத்தொகுப்பு படத்திற்கு மிக பெரிய பலம்.

சைக்கோ திரில்லர் கதையில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து பெண்களுக்கு நடக்கும் குற்றங்களையும் இந்த திரைப்படம் சமூக அக்கறையுடன் சொல்லி இருக்கிறது.

தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் நடிகை மற்ற தொழில்நுட்ப கலைஞர் அனைவரையும் இப்படம் “சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” மிக பெரிய வெற்றியடைய பாராட்டலாம்.

 

 

 

 

 

Comments (0)
Add Comment