நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரைக்குவந்துள்ளது (DNA)
காதல் தோல்வி அதன் காரணமாக குடிப்பழக்கத்திரு அடிமையான மனநிலை அதிலிருந்து மீண்டு வரும் அவருக்கு திருமணம் நடக்கிறது மணப்பெண்ணுக்கு திவ்யாவுக்கு(நிமிஷா சஜயன்) சற்றே மனநிலை பாதிப்பு இருக்கிறது அதை குறையாக பார்க்காமல் பாசத்தோடு ஏற்றுக்கொள்ளும் ஹீரோ ஆனந்த்(அதர்வா முரளி) தொடர்ச்சியாக அவர்களுக்கு குழந்தை பிறக்கின்றது பிறந்த குழந்தைக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் திரைக்கதை.
பிறந்த குழந்தை மாறிவிடுகிறது என்பதை உணர்ந்து விட்ட தாய் குடும்பத்தில் யாருக்குமே சந்தேகம் வராத நிலையில் எது என்னோட குழந்தை இல்லை என்பதை எவ்வளவு சொல்லியும் மனநிலையை காரணம் காட்டி யாரும் நம்பவில்லை தாய் சொல்வது உண்மையான நம்பி விடை தேட புறப்படுகிறார் அதர்வா போலீசை நாடும் அவர் சட்டப்படி தீர்வுகாண நினைக்கிறார்.
குழந்தையை கண்டுபிடிக்காமல் விடப் போவது இல்லை என்ன போலீஸ்காரர் சின்னசாமியாக பாலாஜி சக்திவேல் மிக சிறப்பாக நடித்திருக்கிறார், குழந்தைகளை கடத்தி கொடுக்கும் பாட்டி போலீஸ்யிடம் போல்ட் வசனங்கள் அவர்கள் தொழிலை நியாயப்படுத்தி காட்டுவது போல் இருக்கின்றது, அதர்வா நண்பராக ரமேஷ் திலக் அப்பாவாக சேத்தன், நிமிஷா சஜயன் அம்மாவாக விஜி சந்திரசேகர், வரும் இவர்கள் நடிப்பு சிறப்பு.
கடத்தப்படும் குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகிறதா அல்லது இதன் பின்பு இருக்கும் மெடிக்கல் மாபியா கும்பலால் நடக்கும் பாதிப்புகள் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதை எந்த வித சமரசமும் இன்றி இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஒரு நல்ல திரைப்படமாக கொடுத்து இருக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள்.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன் ஜிப்ரானின் பின்னணி இசை பெரிய பலம் என்றே இளம் இசையமைப்பாளர்களை வைத்து பாடல் போட்டிருக்கிறார் அதுவும் படத்திற்கு பிளஸ்.
புதிதாக திருமணம் ஆகி குழந்தை பெற்றவர்களுக்கு குழந்தை கடத்தல் மருத்துத்துறையில் நடக்கும் பாதிப்புகள் போன்றவற்றை படம் (பாடம்) அனைவரும் பார்க்க வேண்டிய படம் DNA