“ஃபயர்” பிக் பாஸ் புகழ் பாலாஜி மற்றும் நடிகை ரக்ஷிதா, ஜே எஸ் கே சதீஷ், சாக்ஷி அகர்வால், சாந்தினி,கௌரி ஷான், நடிப்பில் ஃபயர், மற்றும் சிங்கம்புலி சுரேஷ் சக்கரவர்த்தி, பலர் நடித்துள்ளனர்,
ஃபயர் திரைப்படம் தினமும் சமூக ஊடகங்களில் செய்திகளில் பார்க்கும் படிக்கும் பாலியல் குற்ற சம்பவங்களை சமூகப் பொறுப்புடன் இயக்கியுள்ளார் ஜே எஸ் கே சதீஷ். இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன ஜே எஸ் கே சதீஷ் அவர்களை பெண் பிள்ளைகளை பெற்ற அனைத்து பெற்றோர்களும் குடும்பத்துடன் படம் பார்த்து பாராட்டவேண்டும்
பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பாலாஜி முருகதாஸ் இவரது பெயர் காசி.. சிகிச்சைக்காக வரும் பெண்களை காதல் என்ற போலி வலையில் பெண்களை விழ வைத்து அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் கேட்பது இவரது வழக்கம், இப்படி பல பெண்களை இதே பணியில் சிக்கவைக்கின்றார்
கணவனை இழந்து வாழும் கௌரி ஷான், வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் மனைவி சாக்ஷி அகர்வால், கணவனால் கைவிடப்பட்டு குழந்தையுடன் வசிக்கும் ரக்ஷிதா மகாலட்சுமி இவரது காதல் வலையில் விழுகிறார்கள்
இவரது லீலைகள் அனைத்தும் சாந்தினிக்கு தெரியவருகின்றது தானும் ஏமாற்றப்பட்டதை தாங்கி கொள்ளமுடியாத சாந்தினி திருமணமாகாத தன்னோட நிலைமையும், காதல் போர்வையில் ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டுகிற காசியினால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
பாலாஜியின் மிரட்டலுக்கு பயந்து தவிக்கும் பெண்கள் அதே நேரத்தில் திடீரென பாலாஜி காணாமல் போகிறார், பாலாஜியை கொலை செய்து விட்டதாகவும் தகவல்கள் வருகின்றது, விசாரணை களத்தில் அதிரடியாக இறங்குகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜே எஸ் கே சதீஷ்
பாலாஜி அவரை கடத்தியது யார்? அவர் கொல்லப்பட்டாரா? என்ற பல திருப்பங்களுடன் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார்
சின்னத்திரையில் ரசித்துப் பார்த்த ரக்ஷிதா கவர்ச்சியில் கலக்கி விட்டார்,பிளேபாய் கேரக்டரை பக்காவாக செய்திருக்கிறார் பாலாஜி மிக நன்றாக நடித்துள்ளார்,சாக்ஷி அகர்வால், சாந்தினி,கௌரி ஷான்,அரசியல்வாதியாகசிங்கம்புலி, சக போலீஸ் ஆக சுரேஷ் சக்கரவர்த்தி அனைவர் நடிப்பும் படத்திற்க்கு பெரிய பிளஸ்,இசை பின்னணி இசை பாடல்கள் ஒளிப்பதிவு எடிட்டிங் நன்றாக உள்ளது.
தனி தனி சம்பவங்களை ஒருங்கிணைத்து அரசியல்வாதியாக வரும் சிங்கம் புலி போலீஸ் அதிகாரியான ஜே எஸ் கே சதீஷ்யை மிரட்டுவது எதற்கு என பல கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அதற்கான விடைகளை கிளைமாக்ஸ் முடிவில் சமூக பொறுப்புடன் சொல்லி இருக்கிறார் ஜே எஸ் கே சதீஷ்குமார்
வாரம் நான்கு திரைப்படம் வரலாம் சமூக பொறுப்புடன் பெண்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வரும் திரைப்படம் வருடத்திற்க்கு சில படங்களே, குடுப்பதுடன் திரையரங்கம் சென்று கட்டாயம் பார்க்கவேண்டிய படம் “ஃபயர்”
Rating: ★★★★☆ 4/5