“குமார சம்பவம்” காமெடி கலந்து சமூக கருத்துடன் சொல்லப்பட்ட “தரமான சம்பவம்”
அமரிமுகமான படத்திலே அமர்க்கள படுத்திவிட்டார் “குமரன் தங்கராஜன்” இயக்குனராக போராடும் அவருக்கு தயாரிப்பாளர் எப்படி கிடைக்கிறார் அதற்காக அவர் குடும்பத்தில் என்ன என்ன நடக்கிறது என்பதே கதை காமெடி கலந்த நடிப்போடு சிறப்பாக செய்து இருக்கிறார்.
சமூகத்திற்காக போராடும் நபராக வரும் இளங்கோ குமரவேல் திடீரென்று மர்மமான முறையில் குமரன் வீட்டில் இறந்து போக அதற்கான காரணத்தை தேடும் போலீஸ் குமாரனை விசாரணை செய்கின்றார் விசாரணையே காமெடியோடு திரைக்கதையும் நகர்த்தி செல்கின்றது. இளங்கோ குமரவேல் கொலை எப்படி நடந்தது குமரன் குடுப்பதிற்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பதே மீதிக்கதை.
தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஜி.எம்.குமார் வாழ்க்கையை அழகாக நடிப்பு மொழில் சொல்லி இருக்கிறார் வீடு என்பது வெறும் கல்லு அல்ல அதோடு பல உறவு பிணைப்புகள் மறக்கவே முடியாத நிகழ்வுகள் பதிந்த அழகான கூடு என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
சமூக போராளியாக வரும் இளங்கோ குமரவேல் தான் சிறந்த கலைஞன் என்பதை மீண்டும் இந்தப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார்.
நாயகனுக்கு நண்பனை வரும் பால சரவணன் தயாரிப்பாளராக வரும் லிவ்விங்ஸ்டன், நாயகன் அம்மா தங்கை, காதலியாக வரும் நாயகி கதாபாத்திரம் என்ன அனைவரும் அவர்களுக்கு கொடுத்த இடத்தை அவர்கள் பாணியில் சிறந்த நடிப்பு மூலம் படத்திற்க்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
இயக்குனர்பாலாஜி வேணுகோபால். திரைக்கதை கையாடல் கதாபாத்திர வடிவமைப்பு என்ன அனைத்தையும் சிறப்பாக செய்து இருக்கிறார் சமூக கருத்தை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கும் விதம் அருமை. முகம் சுளிக்க வைக்கும் வைக்கும் காட்சிகள் வசனம் எதுவும் இல்லாமல் குடும்பத்தோடு திரையரங்கம் சென்று ரசிக்கும் படியான நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்.
ஆச்சு ராஜாமணியின் இசை, ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு,ஜி. மதனின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
நாயகன் குமரன் இயக்குனர் ஆனாரா..? இறந்த குமரவேல் சமூகத்திற்கும் குமரன் குடும்பத்தினருக்கும் என்ன விஷயங்கள் செய்தார் என்பதை விறு விருறுப்பாக எதிர்பாராத கிளைமாக்ஸ் தான் சிறப்பு.