“Mammatiyaan Stars” Web Series Review – மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் சீரியஸ் திரைவிமர்சனம்

மாம்பட்டியான் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டில் ஆர்வமாக உள்ள இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைக்களம், கிராமப்புறங்களில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் சென்னைக்கு வந்து எப்படி கிரிக்கெட் சூதாட்டம் போன்றவற்றைகளில் மாற்றிக் கொள்கிறார்கள் அடுத்தடுத்து அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே விரிவான திரைக்கதை.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில் சவிர் சுதாகர் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி மீது ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கிராமப்புறத்தில் இருந்து சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை  நேரில் வந்து அவரை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறார்கள் அதனால் அவர்கள் வசிக்கும் கிராமத்தில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்து பிடித்தமான கிரிக்கெட் வீரரை எப்படியாவது நேரில் பார்த்து விடலாம் என்று மிகவும் ஆசையும் ஆவலாய் இருக்கிறார்கள்,

திடீரென்று அந்த கிராமத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தும் ஒரு மிகப்பெரிய மனிதர் இறந்து போக அந்த பணம் அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது,எப்படியாவது போட்டியை காண வேண்டும் என்று அவர்கள் கிராமத்தில் இருந்து பணத்தை திருடிக் கொண்டு சென்னைக்கு வருகிறார்கள்,நேரில் வந்து அதிக விலை கொடுத்து வாங்கிய டிக்கெட்டை தன் நண்பர்களிடம் பெற்றுக் கொண்டு ஒரே வரிசையில் நண்பர்களுடன் உட்கார முடியாமல் போய்விடும் என்று அந்த டிக்கெட்டை வெளியில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது போலியான டிக்கெட்டை பெற்றுக்கொண்டு அன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியை காண முடியாமல் போகிற சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். அடுத்த கொஞ்ச நாட்களில் ஒரு நாள் மட்டுமே நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்க என்னெல்லாம் என்னென்னலாம் செய்து முயற்சி செய்கிறார்கள் என்பது சுவாரஸ்யம் குறியாக திரைக்கதையாக இருக்கிறது,

கிராமப்புறம் நட்பு, காதல், என்று அழகாக நகர்த்தி செல்கின்றிருக்கும் திரைக்கதையில் மிகப்பெரிய டூஸ்டாக அவர்கள் சென்னை வந்த பிறகு கிரிக்கெட் சூதாட்டத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளை இந்த வெப் சீரியஸ் தெளிவாக காட்டியிருக்கிறார்கள், கிரிக்கெட்டில் உள்ள ஆர்வம் எந்த அளவுக்கு நல்லதும் செய்யும் கெடுதலையும் செய்யும் என்பது இயக்குனர் மிக அருமையாக இந்த வெப் வெப் சீரியஸ்ல் கொடுத்திருக்கிறார். பரபரப்புக்கு  பஞ்சம் இல்லாமல் ஒரு எபிசோடையும் இயக்குனர் மிக அழகாக வடிவமைத்துள்ளார்.

6 எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப் சீரியஸ் ZEE 5 OTT தளத்தில் தளத்தில் இருக்கிறது கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறவர்களும் கிரிக்கெட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும் இளைஞர்களும் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த வெப்சீரிஸை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.

பின்னணி இசை, ஒலிப்பதிவு அனைத்தும் கூடுதல் பலம் என்றே சொல்லலாம் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்துக்கு ஏற்றது போலவே மிகவும் அழகாக நடித்திருக்கிறார்கள், சஸ்பென்ஸ், தில்லார்,லவ் போன்ற வெப் சீரியஸ் பார்த்து சலிப்படைந்தவர்களுக்கு இந்த வெப் சீரியஸ் ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும்.

மம்பட்டியான் ஸ்டார்ஸ் – வெப் சீரியஸ்

தயாரிப்பு: சிங்காரவேலன்

நடிகர் நடிகைகள்: வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத்

இசை: சவுண்ட் டிசைன்: அருள் முருகன்

ஒளிப்பதிவு: பி எம் ராஜ்குமார்

கதை: சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன்

இயக்கம்: சவிர் சுதாகர்

வெளியீடு: ZEE5 OTT

 

 

 

 

Comments (0)
Add Comment