“Marakkuma Nenjam” Movie Review – “மறக்குமா நெஞ்சம்” திரைவிமர்சனம்

விஜய் டிவி ரக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ராகோ. யோகேந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரக்ஷன், தீனா, ஸ்வேதா வேணுகோபால், மலினா, மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

சச்சின் வாரியர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கோபி துரைசாமி, ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

படத்தில் ரக்சன், தீனா, ஸ்வேதா ஆகியோர் பள்ளி படிக்கும் போது இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். பின் இவர்கள் பள்ளி பருவத்தை முடித்து விடுகிறார்கள். இப்படி இருக்கும்போது 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் இவர்கள் 2008 ஆம் ஆண்டு பள்ளியில் எழுதிய பரிட்சையில் 100% தேர்ச்சியை கொடுக்க மோசடி செய்திருக்கிறார்கள். இதனால் அடுத்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.

இதனால் மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ரக்சன், தீனா இருவரின் காமெடியும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, தீனா உடைய நகைச்சுவை எல்லாம் கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்திய கதை. பள்ளி கால நினைவுகளை மீண்டும் நினைவூட்டி இருக்கிறது என்று சொல்லலாம்.

ரக்ஷன் காதல் காட்சிகள் நன்றாக உள்ளது,இத்திரைப்படம்90ஸ் கிட்ஸ்க்கு அவரது பருவத்தில் பார்த்தது போல் இருக்கும்,இவர்களுடன் முனீஸ்காந்தினுடைய காமெடியும் நன்றாக இருக்கிறது. இவர்களை அடுத்து ஸ்வேதா வேணுகோபால், மதீனா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்தார்கள்.

பாடல்கள் நன்றாக உள்ளது,இசை மற்றும் பின்னணி இசை சிறப்பு,ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது, தங்களுடைய கதாபாத்திரத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

அனைவருக்கும் பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டுவந்து சிறப்பாக இயக்கி ஒரு தரமானப்படமா வந்துருக்கிறது இந்த “மறக்குமா நெஞ்சம்” திரைப்படம்

 

Comments (0)
Add Comment