ராஜுமுருகனின் மக்களுக்கான அரசியல் பேசும் முக்கியமான படைப்பாக இருக்கும் ‘மை லார்ட்’. கிட்னி திருட்டை மையமாக வைத்து கதையை அமைத்து இருக்கிறார். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளை சமாளியான் ஹீரோ சசிகுமாரை வைத்து தோலுரித்து இருக்கிறார்.
திடீரென உடல் நலம் பாதிக்கப்படும் மனைவியின் (சைத்ரா) மருத்துவ செலவிற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்குகிறார் ஹீரோ சசிகுமார் அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியாது அவர்களிடம் எப்படி சிக்குகிறார் என்பது கதை.
பணத்தை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் வெளியூருக்கு செல்கிறார் ஹீரோ சசிகுமார் அந்த வேலையில் அவர்கள் கிராமத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பெரும் விபத்து ஏற்படுகிறது அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கந்துவட்டி கும்பல் சசிகுமார் மற்றும் அவரது மனைவி இறந்ததாக அரசாங்கத்திற்கு தெரிவித்து அதற்குண்டான உயிர் இழப்புத் தொகையை அவரே பெற்றுக் கொள்கிறார்.
உயிரோடு இருந்தும் இறந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
உள்ளூரில் பத்திரிகை நடத்தும் குரு சோமசுந்தரம் சசிகுமார் மற்றும் அவர் மனைவிக்காக ஒரு பெரும் சட்டம் போராட்டத்தை நடத்துகிறார்
இதற்கிடையில் ஒரு ஒரு பெரிய பணக்கார அரசியல்வாதி (ஆஷா சரத்) ஒருவருக்கு கிட்னி தேவைப்படுகிறது அதற்காக சசிகுமாரை தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி குடும்பத்தினர் அவரை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டார் என்பதே திரைக்கதை.
சசிகுமார் மற்றும் நடிகை சைத்ரா நிஜ கேரக்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே நடிப்பை அளவாகவும் சிறப்பாகவும் கொடுத்திருக்கிறார்கள்.
கந்து வட்டிக் கொடுமை உடலுறுப்பு திருட்டு பெரும் அரசியல்வாதிகள் செய்யும் திருட்டுத்தனங்கள் என அனைத்தையும் தோல் உரித்து உள்ளார் இயக்குனர் ராஜுமுருகன்.
ஷான் ரோல்டனின் இசை நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு சத்யராஜ் நடராஜனின் படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.
உயிரோடு இருந்தும் அரசாங்கத்தால் கொல்லப்பட்டவர்கள் மீண்டும் வந்தார்களா சசிகுமார் கிட்னி கொடுத்தாரா இல்லையா என்ன நடந்தது என்பதை அழகாக ஒரு சோசியல் மெசேஜாக சொல்லி முடித்து உள்ளார் இயக்குனர் ராஜமுருகன்.