“Nalla Padam” Movie Review – “நல்ல படம்” திரைவிமர்சனம்

மது பிரியரான ஹரிஷ், தனது நண்பர்களுடன் எப்போதும் மதுபோதையில் இருப்பதோடு, ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, மது கிடைக்காமல் தவிக்கும் அவர்கள் படிப்படியாக அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகிறார்கள். மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் சூழலில் அவர்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பினார்களா என்பதே ‘நல்ல படம்’.

நாயகன் டாக்டர் ஏ.ஹரிஷ், இளமையான தோற்றத்துடன் இருந்தாலும் தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக காமெடி மற்றும் காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். தனலக்‌ஷ்மியும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். கல்கி ராஜாவின் காமெடி, மைண்ட் வாய்ஸ் மற்றும் வசன உச்சரிப்பு படத்தின் கலகலப்புக்கு துணை நிற்கிறது.

இனியன் ஜெ.ஹரிஷின் ஒளிப்பதிவு, சஹிஷ்னா சேவியரின் இசை மற்றும் பி.ஆர்.பிரகாஷின் படத்தொகுப்பு ஆகியவை கதையின் தேவைக்கேற்ப பயணிக்கின்றன. பாடல் காட்சிகள் குறிப்பாக இளமைத் துள்ளலுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மது பழக்கத்தின் பாதிப்புகளையும், அதிலிருந்து மீள்வதன் அவசியத்தையும் கமர்ஷியல் மற்றும் நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பிரபுராம்.சி. கருத்து முக்கியமானதாக இருந்தாலும், திரைக்கதை சில இடங்களில் தடுமாறுவதால் தாக்கம் முழுமையாக ஏற்படவில்லை. சிறிய பட்ஜெட்டின் வரம்புகளும் சில காட்சிகளில் தெரிகின்றன.

இருப்பினும், சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை எளிமையாகவும் பொழுதுபோக்காகவும் சொல்ல முயன்றிருப்பது படத்தின் பலம்.

‘நல்ல படம்’ – சிரிக்க வைக்கும் பாடம்

Comments (0)
Add Comment