“Paramasivan Fathima” Movie Review – “பரமசிவன் பாத்திமா” திரைப்பட விமர்சனம்

“பரமசிவன் பாத்திமா” மதத்தை பற்றி பேசவில்லை மதத்தில் உள்ள பிரிவு அதனால் என்ன என்ன நடக்கும் நடந்தது என்று பேசும் ஒரு கலை படைப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் யோக்கோபுரம் சுப்ரமணியபுரம் என்று இரு ஊர்கள் இருக்கிறது, கிறிஸ்தவர்கள்,இந்துக்கள் அவர்கள் கடவுள்களை வழிபடும் சர்ச்சைக்குரிய மலை கிராம மக்கள் வசிக்கின்றனர்.

மத சம்பந்தப்பட்ட மோதல்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் இரு ஊரை சேர்ந்த இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும் போது மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்த பற்றி இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் களத்தில் இறங்குகிறது. விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை போலீஸுக்கு தெரிய வருகிறது,கொலை செய்தது விமலும் சாயா தேவியும்தான் என போலீசார் கண்டுபிடிக்கின்றனர். எதற்க்காக கொலை நடந்தது என்ன காரணம் என்பதே மீதி கதை,

விமல் நேர்த்தியாக கதாபாத்திரமாகவே சிறப்பாக நடித்துஇருக்கிறார் ஜோடியாக வரும் சாயாதேவி நடிப்பில் அசத்தல்,இசக்கி கார்வண்ணன், வில்லனாக சுகுமார், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மற்றும் அனைத்து நடிகர்கள் கதைக்கு ஏற்றபடி நடித்து மெருகு ஏற்றியுள்ளனர்.

மெலிய மனம் கவரும் தீபன் சக்ரவர்த்தியின் இசை, மலைசூழ்ந்த கிராமங்களை சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்

மதரீதியான பாகுபாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்ற கருத்தை சமரசமின்றி சொல்லி தீர்த்துள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

“பரமசிவன் பாத்திமா” ஒரு திரைப்படமாக இல்லாமல் மதரீதியான பிரச்சனைகள் பாகுபாடுகள் இல்லாமல் இல்லை என்ற உண்மை கருத்தை திரைமொழி மூலம் சமரசமின்றி சொல்லி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்

 

 

Comments (0)
Add Comment