“The Goat Life” Movie Review – “ஆடூ ஜீவிதம்” திரைவிமர்சனம்

பிரித்திவிராஜ் நடிப்பில்  “ஆடூ ஜீவிதம்”மற்றும் அமலாபால்

இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிளெஸி,

எப்படியாவது கல்ஃப் நாட்டிற்கு வேலைக்கு சென்று கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சின்ன ஆசையில், செழிப்பான தனது சொந்த ஊரையும் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியையும் விட்டு செளதி செல்கிறார் நாயகன் நஜீப் முகமது (பிருத்விராஜ்) மற்றும் அவரது நண்பன் ஹக்கீம். செளதி சென்று சேர்ந்ததும் தன்னை அழைத்துச் செல்ல ஏஜெண்ட் யாரும் வராத காரணத்தினால் தவறான ஏஜெண்டிடம் மாட்டிக்கொண்டு ஆடு மேய்க்கும் அடிமையாக பாலைவனத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தான் பேசுவதை புரியவைக்க முடியாமல், எதிரில் இருப்பவர் பேசும் மொழியும் புரியாமல் தவிக்கும் நஜீப், தான் அடிமையாக்கப்பட்டிருப்பதையே ஒரு சில  நாட்களுக்குப் பிறகுதான் உணர்கிறார்.

தனது சொந்த ஊர் மற்றும் மனைவியின் நினைவுகளில் நஜீப் நாட்களைக் கழித்து வருகிறார். ஒரு நாள் எதேச்சையாக கண்ணாடியில் தனது முகத்தில் வளர்ந்திருக்கும் தாடியைப் பார்த்து தான் இங்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டதையும், இங்கிருந்து தான் தப்பிச் செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். தப்பி ஓடும் நஜீபின் முதல் முயற்சி தோல்வியில் முடிய, ஒரு கட்டத்திற்கு மேல் முயற்சியைக் கைவிட்டு தனது அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறார்.

எதிர்பாராத வகையில் ஒரு நாள் தனது நண்பன் ஹக்கீமை மீண்டும் சந்திக்கிறார் நஜீப். இப்ராஹிம் என்கிற இன்னொரு அடிமைக்கு இந்தப் பாலைவனத்தில் இருந்து தப்பிக்கும் வழி தெரியும் என்றும், அவன் இருவரையும் இந்த இடத்தைவிட்டு அழைத்துச் செல்வான் என்றும் ஹக்கீம் சொல்கிறான். நஜீப் தனது வீட்டிற்கு சென்றாரா? இல்லையா? என்பதற்கு படம் பதில் சொல்கிறது. ஆனால் இந்த இடத்திற்கு வந்த அதே மனிதனாக அவன் திரும்பிச் செல்வதில்லை. இந்தப் பாலைவனத்தில் இருந்து நஜீப் தனது வீட்டிற்கு செல்லும் பயணமே ‘ஆடூ ஜீவிதம்’ படத்தின் கதை

முழுக்க முழுக்க பாலைவனத்தில் நடக்கும் இப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களுக்கு பாலைவனத்தில் இருப்பதைப் போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன. பெரிதும் வித்தியாசம் காட்ட முடியாத வெறும் மணல் பரப்புகளை மட்டுமே எடுப்பது என்பது மிகவும் சவாலான ஒரு பணி. ஆனால் ஒளிப்பதிவாளர் சுனில் கே.எஸ் அந்த சவாலை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

பிரித்திவிராஜ் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று கூறலாம்,அமலா பால் சிறிது நேரம் வந்தாலும் நன்றாக நடித்துள்ளார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியுள்ளார் அமலா பால்,பின்னணி இசை நன்றாக உள்ளது.ரஹ்மானின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

 

Comments (0)
Add Comment