“TN 2026 Thanga Natchathiram” Movie Review – “TN 2026 தங்க நட்சத்திரம்” திரைவிமர்சனம்

TTT வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரிப்பில் உமாபதி ராமையா இயக்கத்தில் தேர்தல் நேரத்தில் இன்னும் பரபரப்பை பற்ற வைத்து இருக்கும் படம்தான் TN 2026 தங்க நட்சத்திரம்.

எம்ஜிஆர்,ரஜினி, கமல், விஜய், என சினிமாவில் இருந்து அரசியல் வந்தவர்களை குல்கந்த் குமார் (நட்டி) என்ற கதாபாத்திரத்தை வைத்து கதறும் அளவுவிற்கு சம்பவம் செய்து இருக்கிறது TN 2026 தங்க நட்சத்திரம்.

பீடா கடையில் இருந்து நடிகன் அதில் இருந்து அரசியலில் இறங்கி முதலமைச்சர் என்று வித்தியாசமான முறையில் கதை திரைக்கதை வசனத்தை தொய்வு இல்லாமல் கையாண்ட விதம் இயக்குனர் உமாபதி மற்றும் தம்பி ராமையா இருவரையும் ரசிகர்கள் நிச்சயம் பாராட்டாமல் இருக்கமாட்டார்கள்.

கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும்னு வடமாநில நடிகைகள் கொஞ்சுவது போல நட்டி முதல் பாதி வரை ஹிந்தி கலந்த தமிழில் பேசி தனது சிறப்பான நடிப்பை காட்டியிருக்கிறார். ஒரு நடிகன் எப்படி அரசியல்வாதியாக மாறுகிறான் என்பதை இரண்டம் பாதியில் தெறிக்க விட்டுருக்கிறார் வெறும் குல்கந்த் குமராக இருந்து தங்க நட்சத்திரமாக மாறும் அவரது நடிப்பு அவரது முந்தைய படங்களை பின்னுக்குத்தள்ளிவிடும்.

அமைதிப்படை மணிவண்ணன் போலவே தம்பி ராமையா நடிப்பு படம் முழுக்க ரசிக்கவைக்கிறது, மற்றும் யாஷிகா ஆனந்த்,விஜி சந்திரசேகர்,எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு,ரெடின் கிங்ஸ்லி, அனைவரின் நடிப்பும் சூப்பர், படத்திற்கு தேவையான இடங்களை இவர்களை பயன்படுத்திய விதம் இயக்குனரை பாராட்டலாம்.

விஜய்யை கிண்டல் கேலி செய்து இருக்கிறார்கள் என்று கொந்தளித்த ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை திரையரங்கள் சென்று பார்க்கவேண்டும் அட விஜய்யை விடுங்கப்பா ஒருத்தரை விடாமல் வச்சு செயிச்சுட்டாங்களேன்னு சொல்லுவீங்க, தமிழ்நாட்டுல என்ன என்ன அரசியல் கலாட்டா நடந்துச்சோ அதெல்லாம் திரும்பி பாக்குற போல ஒரு சிறப்பான திரைக்கதை.

200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு உங்களுக்காக வரேன், சிஸ்டம் சரியில்லை, இது போன்ற பல வசனங்களை தேவையான இடத்தில் வைத்து கைத்தட்டல்களை பெற்றுருக்கிறார்கள்.

இசை தர்புகா சிவா, ஒளிப்பதிவு பி. ஜி. முத்தையா, படத்தொகுப்பு அருள் ஆர். தங்கம், நடனம், ஆக்‌ஷன், அனைத்தும் படத்தில் சிறப்பாக அமைந்து இருக்கிறது.

கொடுத்த காசுக்கு எந்த குறையும் இல்லாமல்  குடும்பத்துடன் பார்த்து ரசித்து வரலாம்.

தொடர்ந்து இதுபோல நல்ல திரைப்படங்களை கண்ணன் ரவி குழுமம்  தயாரிக்கவேண்டும், உமாபதி ராமையா இயக்கத்தில் இன்னும் வித்தியாசமான திரைப்படம் அடுத்து எப்போது வரும்ன்னு நிச்சயமாக ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

 

Comments (0)
Add Comment