“Birthmark” Movie Review – “பர்த்மார்க்” திரைவிமர்சனம்

157

சபீர் நடிப்பில் பரத்மார்க் மற்றும் மிர்ணா, விக்ரம் ஸ்ரீதரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அதாவது 1999 களில் நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் பங்கு பற்றிய இந்திய ராணுவ அதிகாரிகள் சிலருக்கு Post War Trauma எனும் தற்காலிக மன அதிர்ச்சி பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பில் உள்ள நாயகன் தன் மனைவி மீது அன்பு செலுத்துகிறான். ஆனால் அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள்.

அவளது பிரசவத்தை வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்று விரும்பி, இயற்கையான முறையில் பிரசவத்தை நிகழ்த்தும் தனியார் இயற்கை மருத்துவ கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவர் தன்னுடைய மன அதிர்ச்சிக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே தன் மனைவியை கவனித்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன் மனைவியின் வயிற்றில் வளரும் கரு தன்னுடையதா..! என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது.. அதை அறிந்து மிர்ணா அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் இந்த குழந்தைக்கு பதிலாக நாம் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சபீர் கூற பயந்து நடுங்குகிறார் மிர்ணா. எங்கே தன் வயிற்ரில் வளரும் குழந்தையை கொன்று விடுவாரோ என்ற பயத்தில் சபீரை குடிசையில் வைத்து பூட்டிவிட்டு தீ மூட்டிவிட்டு தப்பி செல்கிறார். அங்கிருந்து தப்பும் சபீர் மிர்ணாவை துரத்துகிறார். மிர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

அதே நேரத்தில் அவரை சபீர் தாவி பிடிக்கிறார். அடுத்து நடந்தது என்ன? சபீர் மிர்ணாவை என்ன செய்தார், மிர்ணாவுக்கு குழந்தை பிறந்ததா? அதை சபீர் என்ன செய்கிறார் என்ற பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் இப்படத்தின் கதை.

மிர்ணா மிக நன்றாக நடித்துள்ளார் பெண்மையை உணர்த்தும் கதாபாத்திரமாக அமைந்துள்ளது,சபீர் மிக எதார்த்தமாக கதை கேட்ப கச்சிதமாக பொருந்தி உள்ளார்,படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரமும் நன்றாக நடித்துள்ளனர்,இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.