Emoji – ரியல் லைப் ஸ்டோரி Review

85

மஹத் ராகவேந்திரா, மானசா, தேவிகா, vj ஆஷிக் மாறும் சிலர் நடிப்பில் உருவான வெப் சீரீஸ் தான் “எமோஜி”.

கதைப்படி..,

மஹத் வாழ்க்கையில் குறுக்கே வரும் இரண்டு பெண்களுடனான அவரது காதல்தான் இந்த எமோஜி.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மஹத்துக்கு மானசாவுடன் நட்பு கிடைக்கிறது. நீச்சல் வீராங்கனையாக இருக்கும் மானசா விளையாட்டு பொருள்கள் விற்கும் டிக்கத்லான் கடையில் வேலை பார்த்து வருகிறார். எல்லோரும் எதிர்பார்ப்பது மாதிரியே மஹத் மானசா நட்பு காதலாகிறது.

எதிர்பார்க்காத வகையில் அந்த காதல் பிரேக் அப்பும் ஆகிறது. இந்நிலையில் மஹத்துக்கு இரண்டாவது காதல் முளைக்கிறது. நன்றாக போய்க் கொண்டிருக்கும் அந்தக் காதலும் விவாகரத்து செய்யும் நிலையிலிருக்க, இவர்களின் முடிவுக்கு காரணம் என்ன? மீண்டும் இணைந்தார்களா? பிரிந்தார்களா? என்பது மீதிக்கதை…

மஹத் சிம்புவின் நண்பராக இருப்பதாலையோ என்னவோ கிட்டத்தட்ட சிம்புவின் பாத்திரம் மாதிரியே இந்த படத்திலும் அவருக்கு பாத்திரப்படைப்பு அமைந்திருக்கிறது. வசன மாடுலேஷன் எல்லாம் கூட அப்படியே சிம்பு மாதிரியே. அப்படி இல்லமல் இவரின் தனித்துவத்தை காட்டினால் சிறப்பாக இருக்கும்.

அவரது காதலிகளாக வரும் மானசா சௌத்ரியும், தேவிகா சதீஷும் காதல் பிசாசுகள். இந்த இருவரும் எந்த இளைஞன் வாழ்வில் குறிப்பிட்டாலும் இருவரில் ஒருவரை தவிர்த்து இன்னொருவரை காதலிப்பது கடினம். அந்த அளவுக்கு தேவதைகளாக திரையில்தெரிகிறார்கள்.

இவர்கள் இருவரில் தேவிகா சதீஷுக்கு நடிக்கவும் வருகிறது என்பது கூடுதல் பலம். கூடிய விரைவில் திரையை கட்டி ஆளப்போகிறார் தேவிகா என்பது தெரிகிறது.

வசனங்கள் எழுதப்பட்டனவா அல்லது அவர்களே பாத்திரங்களை உணர்ந்து பேசினார்களா என்கிற அளவில் அவ்வளவு இயல்பாக இருக்கிறது உரையாடலும் அவர்களது நடிப்பும்.

இந்த சீரீஸில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக இடம் இருந்தும், அவற்றை அளவாக காட்டியது சிறப்பு. முகம் சுழிக்கவோ, தனிமையில் பார்க்கவோ தேவையில்லை.

இன்றைக்கு இருக்கும் இளைஞர்களின் மனநிலையை காலக்கண்ணாடியாக காட்டியிருக்கும் இந்த எமோஜி, வயதில் முதிர்ந்தவர்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை தரலாம்.

ஜலந்தர் வாசன் காட்சிக்கு காட்சி மாயை செய்கிறது. சனத் பரத்வாஜ் இசையும் ஓகே.

இதெல்லாம் சிறப்பாக இருந்தாலும், vj ஆஷிக்கின் கதாபாத்திரத்தையே நீக்கியிருந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும்.