லோகேஷ் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் N4…
இந்த படத்துல
மைக்கேல் தங்கதுரை, கேபிரில்லா, அப்சல் ஹமீது,அனுபமா குமார்,வடிவுக்கரசி
இவங்க எல்லாம் நடிச்சிருக்காங்க…
படம் வடசென்னை கதைக்களம்…
படம் ஆரம்பிக்கும் பொழுது மீன் வியாபாரம் மீன் வாங்கும் மக்கள் வடசென்னை மக்கள் கடலோரம் இப்படி வடசென்னை மக்களின் வாழ்வியலோடு படம் ஆரம்பிக்கிறது…
படத்தில் மூன்று காதல் ஜோடிகள் இரண்டு ஐந்து நண்பர்கள் இவர்கள்தான் கதைக்களம்…
காவல்துறை அதிகாரியாக அனுபமா குமார் நாயகன் பாட்டியாக வடிவுக்கரசி…
வடசென்னை பெண் போலவே இருக்கும் கேபிரில்லா…
அனைவரின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது… இது காதல் கதையா க்ரைம் சார்ந்த கதையா என்று கேட்டால் எதுவும் இல்லை வாழ்வியல் சார்ந்த கதை…
இளைஞர்கள் காதலிக்கிறார்கள் கஞ்சா அடிக்கிறார்கள் கடலுக்கு போகிறார்கள் துப்பாக்கி எடுத்து சுடுகிறார்கள் மது குடிக்கிறார்கள் என்று இயல்பாக சொல்லி இருக்கிறது N4 படம்…
இந்த படத்தில் முக்கியமான ஹைலைட் என்னவென்றால் யாருக்குமே ஒப்பனை இல்லை…
தமிழகத்தில் இன்று போதைப் பழக்கம் அதிகமாக இருக்கிறது அதுவும் வடசென்னை பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பழக்கம் மிக அதிகமாக இருக்கிறது என்று படம் சொல்ல வருகிறது…
வடிவுக்கரசி வடசென்னை பாஷை பேசி நடித்திருப்பது இயல்பாக இருக்கிறது… அவரா இப்படி நடிக்கிறார் என்று அந்த ஏரியா மக்களை வியந்து இருக்கிறார்கள்
இயல்பான நடிப்பை வடசென்னை பெண் போலவே நடத்திருக்கிறா
இரவு சினிமாவுக்கு வரும் பொழுது மைக்கேல் தங்கதுரையின் தங்கை அபி துப்பாக்கியால் சுடப்பட்டு மரணப்படுக்கையில் படுக்கிறார் அவருக்கு சாவுக்கு காரணமான விஜய் என்ற இளைஞரை தேடி மைக்கேல் அவர் தம்பி கார்த்திக்கும் புறப்படுகிறார்கள்…
அப்போது விபரீதமாக கார்த்தி இறந்துவிட கதை முடிகிறது…
படம் முழுவதும் பக்கத்து வீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்த்தது போல் இருக்கிறது தவிர ஒரு ஒப்பனையான ஜிகினாத்தனமான சினிமா இது அல்ல மிகவும் இயல்பாக எல்லோரும் நடித்திருக்கிறார்கள்… யாரிடம் நடிப்பு என்பதே தெரியவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம்… பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் மொத்தத்தில் இந்த படம் எப்படி இருக்கிறது என்றால் இயல்பான வாழ்க்கையில் வாழும் வட சென்னை இளைஞர்களை பற்றி தத்துவமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்…
மொத்தத்தில் இது ஒரு படமாக இல்லாமல் வாழ்க்கையாக இருந்தது இதுவே இந்த படத்திற்கு பலம்…