“Naangal” Movie Review – “நாங்கள்” திரைப்பட விமர்சனம்

70

பாசமற்ற தந்தையின் கட்டுப்பாட்டில் மூன்று ஆண் குழந்தைகள் வளர்கிறார்கள். மனைவியை விட்டு பிரித்துவிட்ட நாயகன், தனது ஈகோவோடு 3 மகன்களை வளர்க்கிறார். கண்டிப்பு குழந்தைகள் மீது அடக்குமுறை, இதன்காரணமாக குழந்தைகள் எப்படில்லாம் அவர்கள் வாழ்க்கையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக ஒரு ஆவணப்படத்திற்கு உரிய கதையை வாழ்வியல் சூழலை கண்முன் நிறுத்தி ஆவணப்படுத்தியுள்ளார் இயக்குநர் அவினாஷ் பிரகாஷ். எழுத்து, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு  இரண்டையும் சிறப்பா செய்துஇருக்கிறார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

தந்தையாக அப்துல் ரபே ஒரு மிக வித்தியாசமான தந்தை கேரக்டரை அவர் காட்சியில் வந்தாலே நாம் அவர் மீது கோவத்தின் உச்சிக்கே சென்று விடும் அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்

நாயகியாக பிரார்த்தனா மிக மிக இயல்பாகவும், குழந்தைகளாக நடித்த  (மிதுன், ரித்திக், நிதின்) அவர்களின் அப்பாவித்த நடிப்பால் நம் கண்களை குளமாக்குகின்றனர்.

ஒளிப்பதிவு எடிட்டிங் இசை படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்திருக்கிறார்கள் குறையில்லாத பிளஸ் என்றே சொல்லலாம்.

உணர்ச்சிப் பயணத்தில் பல இடங்களில் நம்மை கேள்வி கேட்கும்,தாயின் அன்பும், தந்தையின் கண்டிப்பும் எதையும் மிகைப்படுத்தாமல் குழந்தைகளுடன் வாழ்க்கையில் சமநிலையுடன் இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படம்.