மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பல மொழி சினிமா ரசிகர்களையும் கொண்டாடிய படம் தான் பானி இயக்குனருக்கு முதல் படமா இது சற்று நம்பமுடியாத அளவிற்கு மிரட்டி எடுத்துருக்கிறார் அடிப்பொலி திருச்சூரில் மிக பெரிய குடும்பமாக நண்பர்களாக ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் போன்ற பெரிய தொழில்களை கிரி (ஜோஜு ஜார்ஜ்) மற்றும் அவரது மூன்று நண்பர்கள் (பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர் மற்றும் பாபி குரியன் செய்துவருகின்றனர் மகிழ்ச்சையாக இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக சொல்லப்பட்டுருக்கிறது.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இரண்டு இளைஞர்கள் திருச்சூர் ATM-யில் வைத்து ஒருவரை கொலை செய்கின்றனர், கொலை செய்து கிடைத்த பணத்தில் சுற்றி திரியும் இளைஞர்கள் டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் கிரியின் மனைவியை தவறாக சீண்டி கிரியிடம் அடி வாங்கி அவமானம் தாங்காமல் பழி வாங்க துடிக்கிறார்கள்,எப்படி பழி வாங்கினார்கள் அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே மிதி கதை.
அபிநயா மற்றும் ஜோஜு ஜார்ஜின் நண்பர்களாக நடித்த சீமா, சுஜித் சங்கர், பிரஷாந்த் அலெக்ஸ்சாண்டர், பாபி குரியன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,இளைஞர்களாக நடித்த சாகர் ஜுனைஸ் நேர்த்தியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளனர்,அவர்களின் சைக்கோ செயல்களை பார்க்கும் போது கொலை நடுங்குகின்றது.
சாம் சி.எஸ் மற்றும் விஷ்ணு விஜய் இசை மற்றும் ஒளிப்பதிவு வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜின் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது,அடுத்து அடுத்து ரத்தம் தெறிக்க வித்தியாசமான பழிவாங்கல் கதையை விறுவிறுப்பாகத் தந்து தன்னை சிறந்த இயக்குனராக நிரூபித்திருக்கிறார்.
பானி சாதாரண மனிதனின் அசாதாரண போராட்டம் நல்ல கதைக்களமாக அமைந்த படம் மலையாளம் அல்லாமல் தமிழிலும் வெற்றியடைந்து ரசிகர்களை திரையரங்கிற்கு ஈர்க்க வைக்கிறது.