“Rasavathi” Movie Review – “ரசவாதி” திரைவிமர்சனம்

214

“ரசவாதி “அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி மற்றும் நடிகை தனியா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கொடைக்கானலில் சித்த வைத்தியசாலை ஒன்றை நடத்தி வருகிறார் அர்ஜூன் தாஸ் . அங்கு இருக்கும் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான ரெஸார்ட்டில் மேனேஜராக வேலைக்கு சேர்கிறார் நாயகி தான்யா ரவிச்சந்திரன். இதே கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு புது இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் வில்லன் சுஜித் சங்கர்.

வில்லன் என்றால் அர்ஜூன் தாஸின் காதலுக்கு வில்லன். தொடக்கத்தில் இருந்தே மர்மமான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் வில்லன் அர்ஜூன் தாஸின் காதலை ஏன் பிரிக்க நினைக்கிறார்? அர்ஜூன் தாஸின் கடந்த காலத்திற்கும் இந்த புதிய இன்ஸ்பெக்டருக்கும் என்ன பகை என்பதை நிதானமான திரைக்கதையில் மிக நேர்த்தியான காட்சியமைப்புகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அர்ஜுன் தாஸ் நடிப்பு சிறப்பு மிக எதார்த்தமாக நடித்துள்ளார்,தனியா ரவிச்சந்திரன் மிக நன்றாக நடித்துள்ளார் மிக அழகாக உள்ளார் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரம் உண்மையில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பார்கள் போல என்று நம்மை பயமுறுத்தி கதையோடு கொண்டு செல்கின்றது சிறப்பு.

இசை,ஒளிப்பதிவு,எடிட்டிங் நன்றாக உள்ளது படத்திற்கு மெகா பெரிய ப்ளஸ், கதையோட வரும் பாடல்கள் மனதில் நிற்கின்றது

அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்,சினிமா ரசிகர்களுக்கு விருந்து .