ரிச்சர்ட் அவரது நடிப்பில் சில நொடிகளில்,கதையின் நாயகியாக யாஷிகா ஆனந்த் மற்றும் கீதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லண்டன்: கதையின் நாயகன் ராஜ் மருத்துவராக இருக்கிறார். இவருக்கு மாயா என்கிற மாடல் அழகியுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது, ஒருநாள் அவரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் ராஜ், மாயாவை வீட்டிற்கு அழைத்துவருகிறார், இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் சமயத்தில் போதை பொருளை அதிகமாக எடுத்ததனால்,மாயா மயங்கி விழுந்து இறந்து விடுகிறார்.

தனது மனைவி வருவதற்குள் மாயாவை மறைத்து வைக்க வேண்டும் என நினைக்கும் ராஜ் மாயாவை மறைத்து விடுகிறார். ஆனால் அந்த சம்பவத்தை நினைத்து ராஜ் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு என்ன நடந்தது என்பதை மனைவி மேதாவிடம் கூறுகிறார். அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
ரிச்சர்ட் நடிப்பு பிரமாதம் அவருக்கு கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரமாக யாஷிகா ஆனந்த் இப்படத்தில் தோன்றியுள்ளார்,யாஷிகாவின் நடிப்பு மற்றும் ரிச்சர்டுடன் வரும் காதல் காட்சிகள் அனைவரது மனதையும் அல்லும்.
கீதாவின் நடிப்பு எதார்த்தம் மற்றும் சுயநலம் அனைத்தும் கூறலாம்,இசை மற்றும் பின்னணி இசை,ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.
இத்திரைப்படம் கள்ளக்காதலை மையமாக வைத்து கதை மற்றும் திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்