ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன்,கோகுல் இயக்கத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன் (Singapore Saloon). வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தியேட்டரில் வெளியாகியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தின் விமர்சனத்தை காணலாம்.

முடி திருத்தும் தொழிலாளியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியிலிருந்து இப்படம் தொடங்கி அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஃபிளாஷ்பேக் வழியாக விவரித்து இதிலிருந்து ஆர்.ஜே பாலாஜி மீண்டாரா? இல்லையா? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் அடிப்படை கதையாகும்.
தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் ஆர்.ஜே.பாலாஜி தனது சிறுவயது முதல் அந்த ஊரில் முடி திருத்தும் தொழிலாளியாக இருக்கும் லாலை தனது ரோல் மாடலாக ஏற்றுக் கொள்கிறார். தான் எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணராக வருவேன் என கனவு கண்டு கொண்டிருக்கிறார். இதற்காக பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சிகை அலங்கார பணியில் அடியெடுத்து வைக்கிறார். அந்த வகையில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான ஜான் விஜய்யிடம் வேலைக்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து வெளியேறி தனியாக சிங்கப்பூர் சலூன் என்ற பிரமாண்டமான கடையை தொடங்க நினைக்கிறார். இந்த கடை தொடங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவுகிறது. இதனால் விரக்தியடையும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை முடிவுக்கு செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் திட்டமிட்டப்படி சிங்கப்பூர் சலூன் கடை திறக்கப்பட்டதா? ஆர்.ஜே பாலாஜியின் தற்கொலை எண்ணம் தடுக்கப்பட்டதா? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை ஆகும்.

ஆர் ஜே பாலாஜி நடிப்பு நன்றாக உள்ளது மிக யதார்த்தமாக நடித்துள்ளார்,மீனாட்சி சௌத்ரியன் கதாபாத்திரம் சிறப்பு மிக அழகாக உள்ளார்,லால் ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் கதாபாத்திரமாக வாழ்ந்து உள்ளார்,சத்யராஜின் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது அவர்தான் இப்படத்தை தாங்கி செல்கிறார்,இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இந்த சிங்கப்பூர் சலூன் வாழ்வில் உயர வேண்டும் என்று தோன்றும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு சமர்ப்பணம்.