“TEN HOURS” Movie Review – “10 ஹவர்ஸ்” திரைப்பட விமர்சனம்

10

சிபிராஜ் நடித்துள்ள 10 ஹவர்ஸ் திரைப்படம், ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதைக்களம் ஜீவா என்ற இளைஞராக ஐயப்ப பக்தராக  வருகிறார். அவருடன் ஆடுகளம் முருகதாஸ், ஜீவா ரவி, திலீபன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்,நடிகை சாருமிஷா தனது அழகான நடிப்பால் கவர்கிறார்.

இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் ஒருநாள் இரவு திரில்லிங் கதையில், ஒரே நம்பர் பிளேட்டை கொண்டு பயணம் செய்யும் இரண்டு பஸ்கள், கடத்தல், சதி என பல திருப்பங்களுடன், இயக்குநர் அரசியல், தேர்தல், மக்கள் விழிப்புணர்வு போன்ற சமூக பார்வையையும் புகுத்தியிருக்கிறார்.

ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவில், பஸ், போலீஸ் ஸ்டேஷன்,இரவு நேர ஹைவே வேகம் கதையின் விறு விறுப்பு குறையாமல் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்,இசை அமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தியின் பின்னணி கதைக்கு மேலும் வலுசேர்த்து இருக்கிறது, மொத்தத்தில், 10 ஹவர்ஸ் ஒரு சம்பந்தப்பட்ட டார்க் நைட் திரில்லராகும். சமுதாயக் கருத்தையும், சஸ்பென்ஸையும் சேர்த்து சொல்லும் நல்ல முயற்சி, சிபிராஜ்-க்கு இந்த திரைப்படம் அவரது திரைப்பயண வாழ்க்கையில் மேலும் ஒரு மைல்கல்.