“Trauma” Movie Review – “ட்ராமா” திரைப்பட விமர்சனம்

311

தனக்குள் இருக்கும் இருக்கும் குறையை மனைவியிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் ஹீரோ விவேக் பிரசன்னா செயற்கை கருத்தரிப்பு மையத்தை வைத்து ஏமாற்றும் போலி கும்பல் பிடியில் சிக்குகிறார். விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு என்ன நடந்தது, பூர்ணிமா ரவி இதே கும்பலால் ஏமாற்றப்பட்டு காதல் வலையில் சிக்கி கர்ப்பம் ஆகும் நிலையில் அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பது என்பதே படத்தின் கதை.

ஹீரோவாக  நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, ஹீரோயின் சாந்தினி எதார்த்தமான நடிப்பின் மூலம் உண்மையான குழந்தை இல்லாமல் ஏங்கும் தம்பதிகளாவே வாழ்ந்து இருக்கிறார்கள், பூர்ணிமா ரவி நடுத்தர ஆட்டோ ஓட்டுனர்கள் மகளாக அபாரமாக நடித்து இருக்கிறார்.

இவர்களின் பாதிக்கப்பட்டதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற கதையை வேறு வேறு கோணங்களில் கதையை நகர்த்தி மர்ம முடிச்சுகளால் இணைத்து இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ் மறைந்த நடிகர் மாரிமுத்து, நடிகை ரமா இளம் நாயகனாக நடித்திருக்கும் பிரதோஷ், விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக், ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிரோட்டமாக அமைத்தது சிறப்பு.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இசை மற்றும் பின்னணி இசையில் சிறப்பான பணியை செய்து இருக்கிறார், அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மற்ற தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் படத்திற்கு பிளஸ்.

காதல் நட்பு என்ன கலவையாய் கதையை சொல்லி இப்படியெல்லாம் ஏமாற்றப்படலாம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் படம் அல்ல பாடம் இந்த “ட்ராமா”