மனைவியின் துரோகம்…
குழந்தைக்காக ஏங்கும் தந்தை…
நண்பனை காப்பாற்றும் ஆதி…
காட்டுக்குள் இரண்டு குருவிகள்…
கடமையை செய்ய தவறிய இன்ஸ்பெக்டர்…
கூலிக்காக கொலை செய்யும் கூலிப்படை…
இவர்களை வைத்து பின்னப்பட்டது தான் பருந்தாகுது ஊர்குருவி
காயத்ரி ஐயர் ஒரு நடிகை அவரது கணவன் தான் விவேக் பிரசன்னா…
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் காயத்ரி ஐயர் ஒரு குழந்தைக்கு தாயாகிறார்…
இதைக் கேட்ட மாறன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்…
ஆனால் காயத்ரி ஐயர் தனக்கு மூன்று படங்கள் ஒப்பந்தமாக இருப்பதால் இப்பொழுது குழந்தை வேண்டாம் என்கிறாள்…
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது…
அது மாறனை கொலை செய்யும் அளவுக்கு காயத்ரி போகிறார்…
மாறன் கம்பெனியில் சில பிரச்சனைகள் நடக்கிறது அதனால் அவரை சேஃப்டியாக இருக்க சொல்லி ஒரு காட்டுக்குள் அனுப்புகிறார் மனைவியான காயத்ரி ஐயர்…
அங்கு செல்லும் மாறன் கூலிப்படையாளர்களால் தாக்கப்பட்டு மரண பீதியில் கிடக்கிறார்…
ஆதி ஒரு அனாதை காசுக்காக எதையும் செய்பவன் போலீஸ் ஆன போஸ் அவனை கூட்டி சென்று காட்டுக்குள் மாறன் இருக்கும்இடத்தில் விலங்கு போட்டு மாட்டி வைத்து விடுகிறார்…
அதன் பிறகு ஆதியும் மாறனும் எப்படி போலீஸிலிருந்து கூலிப்படை ஆட்களிடம் இருந்து தப்பினார்கள் இறுதியில் என்ன ஆனது என்பதுதான்…
பருந்தாகிறது ஊர்குருவி படத்தின் கதை…
படம் முழுக்க காட்டுக்குள்ளேயே நடப்பதால் ஒளிப்பதிவாளரின் திறமை நன்றாக இருக்கிறது…
பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக இருக்கிறது.
மாறனாக விவேக் பிரசன்னா இவரின் நடிப்பு படம் முழுக்க ரணகளம் தான்…
ஆதி என வரும் ஹீரோ இவர் மாறனை காப்பாற்றுவதில் பணத்துக்காக காப்பாற்றுவதில் இருந்து அடுத்து நட்புக்காக காப்பாற்றுகிறார் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது…
இயக்குனர் ராம் இடம் உதவியாளராக இருந்தவர் இந்த படத்தின் இயக்குனர் சில இடங்களில் இயக்குனர் ராம் அவர்களின் சாயல் படத்தில் தெரிகிறது…
காதலும் துரோகமும் தாய்மையின் பொய் வேசமும் பணத்துக்காக கொலை செய்யும் மனைவியும் பணத்திற்காக கடமை தவறும் காவல்துறை அதிகாரியும் காமம் கொண்டு அலையும் எம்.எல்.ஏ.வும் படத்தின் கதையில் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள்…
இரண்டு மணி நேரம் படம் தான் முதலில் அரை மணி நேரம் ஸ்லோவாக இருக்கிறது அதன் பிறகு கதை வேகம் எடுக்கிறது…
அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற தோணியில் கதை போய்க்கொண்டிருக்கிறது எப்படி இருந்தாலும் மாறனும் ஆதியும் தப்பித்து விடுவார்கள் என்று படம் பார்க்கும் நமக்கு தெரிந்து விடுவதால் கொஞ்சம் பதட்டம் இல்லாமல் இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் இந்த பதட்டத்தை பீதியை அதிகப்படுத்தி இருக்க வேண்டாமா இயக்குனர்…
இரண்டு குருவிகள் காட்டுக்குள் இருந்து எப்படி தப்பித்து பருந்தாக மாறினார்கள் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது படத்தின் பணிபுரிந்த டெக்னீசியன் அனைவரும் நன்றாக
உழைத்து இருக்கிறார்கள் வித்யாசமான கதையில் படத்தை எடுத்திருக்கிறார்…
வித்தியாசமான படத்தை விரும்புவோர் இந்த படத்தை நிச்சயம் விரும்பலாம்…
பருந்தாகுது ஊர் குருவி மொத்தத்தில் இது பருந்தா, குருவியா அதையும் தாண்டி ஏதாவதா தெரியல…