“செங்களம் ZEE5” திரைவிமர்சனம்

85

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக தந்துள்ளது இணையத் தொடர்…

Abi & Abi  அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில்,

உருவாகியுள்ளது…

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில்,

வெளிவந்துள்ள இந்த தொடரை அருமையாக எழுதி இருக்கிறார் இயக்குனர்…

கொலை செய்ய துடிக்கும் கலையரசன் அதை கண்டுபிடிக்க துடிக்கும் அர்ஜய்…

தனது குடும்பம் மட்டுமே விருதுநகர் நகராட்சியில் ராஜாங்கம் நடத்த வேண்டும் என்று துடிக்கும் ராஜமாணிக்கத்தின் குடும்பம்…

அவர்களை கறுவருக்க துடிக்கும் வேலா ராமமூர்த்தி…

வாணி போஜனின் தோழியாக வரும் நாச்சியார்…

நாச்சியார் நடத்தும் சூழ்ச்சி நகராட்சியை கைப்பற்ற அவர் போடும் வேஷம்….

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அருமையாக செதுக்கி இருக்கிறார்..

இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக வந்துள்ளது…

அரசியல் விளையாட்டில் இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா என்று சொல்லும் அளவுக்கு மலிவான சூழ்ச்சிகளும் கழுத்தையருக்கும் சம்பவங்களும் இத்தொடரில் ஏராளம் தாராளம்…

இசையமைப்பாளர் தரன் குமார்..,

அருமையான இசை தொடருக்கு மிகவும் உயிரோட்டமாக உள்ளது…

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன்..,

இத்தொடரின் நாயகன் என்றால் மிகையல்ல அந்த அளவுக்கு அவர்களின் தொழில்நுட்பம் மிகுந்திருக்கிறது…

நடிகை ஷாலி..,

நாச்சி என்ற கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்குகியிருக்கிறார்.

அவர் ஒரு  அரசியல்வாதியை நினைவூட்டினாலும் அவரின் தோற்றம் அவர்களின் மாஸ்டர் மைண்ட் இத்தொடருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

தொடரில்..,

சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன்.

ஆகியோர் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்..

அரசியலில்..,

பொய், வஞ்சம், சூது, லஞ்சம், ஊழல் சூழ்ந்த உலகாக தோன்றி அந்த உலகில் இருக்கும் அரசியல்வாதிகளை கிட்டத்தட்ட பூஜ்ஜியம் போன்றே பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாணி போஜன் நடிப்பு பக்காவாக பொருந்தி போகிறார் சூரியகலாவாக…

முதல் பாதியில் சாந்தமாக வரும் அவர் பின்பாதியில் அரசியலில் வைரமாக ஜொலிக்கிறார்.

கலையரசனின் காதல்,

வாணி போஜனின் ஊடல்,சாலியின் சூழ்ச்சி,

வேலாராம மூர்த்தியின் சூழ்ச்சி,விஜி சந்திரசேகரின் பாசம்

எல்லாம் கலந்த கலவி தான் இந்த செங்கலம்

முதல் எபிசோடு முழுவதும் கலையரசனின் துரத்தல் காட்சிகளும் கொலை செய்யும் காட்சிகளுமே அரங்கேறி இருக்கிறது.

இரண்டாவது எபிசோடில் வாணி போஜன் அவர் கணவர் வீட்டுக்கு எப்படி போகிறார் ஏன் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் அது முக்கியமாக இடம் பெறுகிறது.

மூன்றாவது எபிசோடு விருதுநகர் நகராட்சியில் சேர்மன் பதவிக்கு நடக்கும் சூது எதிரிகளின் வீழ்ச்சி சூழ்ச்சி இது அரங்கேறி இருக்கிறது.

நாலாவது எபிசோடில் கலையரசன் போலீஸ் அதிகாரியான மாரிமுத்துவை ஏன் கடத்துகிறார் என்ற பரபரப்பான சூழல் வருகிறது.

ஐந்தாவது எபிசோடில் நாச்சியார் என்டிரிஆகிறார் நாச்சியாரை தேடி வாணி போஜன் தன் அப்பாவுடன் விளாத்திகுளம் செல்வதும் அறங்கேறி உள்ளது.

ஆறாவது எபிசோடு முழுக்க முழுக்க நாச்சியார் ராஜாங்கம் தான் அவர் சொல்வது தான் வாணி போஜன் கேட்கிறார் நகராட்சியில் சேர்மன் ஆக வாணி போஜனை எப்படி ஜெயிக்க வைக்கிறார்

என்பது அரங்கே இருக்கிறது.

அடுத்த எபிசோடில விஜி சந்திரசேகர் மரணம்…

போலீஸ்காரர் குளிர் கண்களில் மண்ணைத் தூவி  தன் தாயைஎப்படி அடக்கம் செய்கிறார் கலைஅரசன் என்பது அரங்கேறி இருக்கிறது.

இப்படி தொடர் முழுவதுமே விறுவிறுப்பையும் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளார் இயக்குனர் திரைக்கதையில் அவ்வளவு ஒரு வேகம் அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

மொத்தத்தில் இந்த செங்கலம் அரசியல் சதுரங்க வேட்டை அரசியல் என்றாலே நியாயம் தர்மம் கிடையாது அதர்மம் தான் ஜெயிக்கும் என்பதை முடிவாக சொல்லி இருக்கிறார்.

அடுத்த ஒரு சீசன் 2 காக இயக்குனர் கதையை நகர்த்திக் கொண்டு சென்றுள்ளார் என்பது தெரிகிறது செங்களம் தொடருக்கு வாழ்த்துக்கள்…