“பத்து தல” திரைவிமர்சனம்

134

இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.

பத்து தல கெத்து தலையா வெத்து தலையா வாங்க பார்க்கலாம்…

சிம்பு சார் கிட்ட கால் சீட்டு வாங்கும்போது சார் இந்த படத்துல உங்களுக்கு ஜோடி கிடையாது லூசு பெண்ணே லூசு பெண்ணே என்று பாட்டு கிடையாது அப்படின்னு சொல்லிட்டாங்க போல அதனாலதான் ஆடியோ ரிலீஸ் போது மேடையில தன்னோட ஆசையான பாட்ட லூசு பெண்ணே லூசு பெண்ணே பாடி தீத்துட்டாரு போல…

இடைவேளைக்கு இரண்டு நிமிஷம் முன்பு தான் இந்த படத்துல சிம்புவறாரு

அவர் வந்ததற்கு பின்னால பஞ்சு மேல பஞ்சு பேசி இஞ்ச்  இஞ்ச்சா நம்ம நெஞ்சில் இடம் பிடிக்கிறார்…

வாயத் திறந்த பஞ்ச்

எதிரி அடிச்சா பஞ்ச்

துரோகம் இந்த ஏஜியருக்கு புதுசு இல்ல அப்படிங்கிறார் யார் துரோகம் பண்ணினார்கள் என்று புரியவில்லை…

நம்ப டி ஆர் சார்

சண்டைக் காட்சிகளில்

வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி

போடட்டுமா உன் உடம்ப பிச்சு

இப்படி டயலாக் பேசிட்டே சண்டை போடுவார் அதுபோல இந்த படத்துல நம்ம  எஸ் டீ ஆர் புலிதுரத்தும் புலியே சிங்கம் துரத்தும் ஆனால் சிங்கத்தை மட்டும் எதுவும் தொரத்த முடியாது சிங்கம் காட்டுக்கு ஒரே சிங்கம் தான்டா அப்படின்னு டயலாக் பேசுகிறார்…

சரி நம்ம கௌதம் கார்த்திக் என்ன பண்றாரு நீளமா முடிவெட்டு வச்சு கிட்டு சட்டை பட்டனை போடாம வந்தா அவரு ரவுடி நாயகன் அப்படின்னு நினைச்சுக்காதீங்க

இந்த படத்துல

ஒரு காவல்துறை அதிகாரி ஏ ஜி ஆர்

ராவணணை நேருக்கு நேரா சந்திக்க போற ஒரு சிபிஐ தான் கௌதம் கார்த்திக்…அங்க போய் ப்ரியா பவானி சங்கர் சந்திக்கிறார் ஆனா பாட்டெல்லாம் இல்லை…

வெறும் லவ் ஸ்மட்டும் தான்…

கௌதம் வாசுதேவன் மேனன் செமய கலக்கி இருக்காரு அவர் வர்ற காட்சிகள் எல்லாம் வேற வேற லெவல்

பிரிய பவானி கதையோடு ஒட்டி வராங்க பத்தோடு பதினொன்னா இல்லாம படத்துல முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க…

நம்ம சிம்பு சாரோட தங்கச்சியா அனு சித்தாரா நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் அண்ணன் தங்கச்சி மாதிரியே அழகோடு இருக்காங்க.

கன்னட நடிகர் ஒருத்தர் கூட்டி வந்திருக்காங்க இனிமேல் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்…

ஏ ஆர் ரகுமான்மியூசிக்ல பின்னணி இசை தான் சூப்பரா இருக்கு சாயிஷா போடுற அந்த பாட்டு செம துள்ளல்…

ஜில்லுனு ஒரு காதல் படத்தை கொடுத்த கிருஷ்ணா ஜம்முன்னு ஒரு ஆக்சன் படத்தை கொடுத்திருக்காரு இந்த படம் தேருமா வசூலில் சாதனை புரியுமா ரசிகர்களுக்கு சிம்பு படம் மாறுபட்ட நடிப்பு பிடிக்குமா இனி ஆக்சன் கட்சியில் அசத்துவாரா

சிம்பு இதெல்லாம் இந்த படத்தோட ரிசல்ட் பொறுத்து…

சரி படத்தின் கதைக்களம் என்ன சென்னை பெருநகர தலைமை காவல் அதிகாரி தூத்துக்குடியில் இருக்கும் ஏஜிஆர் என்கிற ராவணனை பற்றி துப்புதுலக்கக ஒரு காவல்துறை அதிகாரியை அனுப்புகிறார்…

அந்த காவல்துறை அதிகாரி தான் நம்ம கௌதம் கார்த்திக் அவர் அங்கு சென்ற பின் தெரிகிறது  நல்லவர் எதிரிகளை அழிக்க நினைப்பது நல்ல விஷயங்களுக்காக தான்…

அரசியல் வாதிகள் தான் அவரை தப்பாக கையாளுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவருக்கு உதவினாரா அவரை கைது செய்தாரா என்பது தான் படத்தின் ஒன்லைன்…

ஒப்புலி கிருஷ்ணாவும் எஸ் ராமகிருஷ்ணன் சேர்ந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்கள்

கன்னய படத்தை அப்படியே எடுக்காமல் தமிழுக்காக சிம்புக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்…

விசாகப்பட்டினத்தில் அந்த கடைசி கிளைமாக்ஸ் சண்டை காட்சி மிகவும் நன்றாக படமாக்கபட்டிருக்கிறது.

மொத்தத்தில் இந்த பத்து தலை வெத்து தலையா கெத்து தலையா என்றால் நிச்சயமாக கெத்து தல தான் சிம்பு படத்தில் மீண்டும் ஒரு வைரக்கல் கௌதம் கார்த்திக்கு ஆக்சன் பட வரிசையில் இது மைல் கல் …

சாயிஷா நடன காட்சிகளுக்கு கண்டிப்பாக இனி அழைக்கப்படுவார்…

மொத்தத்தில் இந்த பத்து தல தமிழ் சினிமாவின் கெத்து தல…