“தசரா” திரைவிமர்சனம்

104

வெப்பம், நான் ஈ, ஆஹா கல்யாணம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தெலுங்கு நடிகர் நானி.

நேச்சுரல் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

தற்போது, தெலுங்கில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள தசரா படத்தில் நானி நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்

இதற்கு முன் நேனு லோக்கல் என்ற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது தசரா மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார்…

இந்தப் படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் அக்டோபர் மாதம் வர வேண்டிய தசராவை மார்ச் மாதத்துக்கே கொண்டு வந்து இருக்கிறார் நானி.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெல்லா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்…

இந்த படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் அசத்தி உள்ளார்.

அவரின் நடனம் அற்புதமாக இருக்கிறது அவர் பேசும் டயலாக் டெலிவரி அவர் முகபாவம் எல்லாம் நன்றாக இருக்கிறது…

நாணிக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் காட்டும் ஆக்ரோஷம் ஒரு முகம் பாவம் நண்பன் சூரிக்காக அவர் எடுக்கும் அவதாரம் கீர்த்தி சுரேஷ்க்காக

கண்ணீர் வடிக்கும்

இப்படி எல்லா வகையிலும் நானி நடிப்பு மிக சூப்பராக இருக்கிறது…

படத்தின் ப்ளஸ் என்ன வாங்க பார்க்கலாம்

வித்தியாசமான காதல் கதை… நட்பு மேஜிக்

கீர்த்தி சுரேஷ் நடனம் நடிப்பு

நானியின் நடிப்பு சன்டை

கிளைமாக்ஸ் கட்சியில்  நடிப்பு நன்றாக இருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி செய்யும் பாடல்களும் துள்ளாட்டம் போட வைக்கிறது…

கேமரா கைவணம் நன்றாக இருக்கிறது கருப்பு நிற பொழுதில் சேரும் சகதையுமாய் இரவு காட்சிகள் நன்றாக படம் பிடித்திருக்கிறார்…

சமுத்திரகனியின் நடிப்பு நன்றாக இருக்கிறது.

இயக்குனர் எடுத்துக்கொண்ட கதையை நேராக சொல்லி இருக்கிறார் சில்க் ஸ்மிதாவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்…

கிராமத்தில் நடக்கும் வஞ்சமும் பழிவாங்கலும் இயல்பாக வந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் மீது வில்லன் காமம் கொண்டு அலைவது ஆகட்டும் பூர்ணா அதை வெளிச்சமாக்கி கணவனை வெறுப்பதும் நன்றாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் மீது ஞானி சின்ன வயது முதல் கொண்டு காதலிப்பது நண்பனுக்காக காதலை மறைப்பது அது போன்ற காட்சிகள் உயிரோட்டமாக இருக்கிறது.

படத்தின் முழுக்க மதுவை உபயோகப்படுத்தி விட்டு கடைசி காட்சியில் மது பார் கடையை நானி தீ வைத்து கொளுத்துவது சிரிப்பு தான் வருகிறது…

மொத்தத்தில் இந்த தசரா அசராத காதல் வன்முறை களம் கொண்ட நட்பின் உணரத்தை சொல்லும் தரமான படம்…