வரலாறு முக்கியம் – விமர்சனம் 3.5/5

81

கோவையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் தன்னுடைய அப்பா கே எஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறார் ஜீவா.

இவர்கள் வசிக்கும் அதே தெருவுக்கு அக்கா தங்கையான காஷ்மிரா, பிரக்யா வந்து வசிக்க ஜீவா காஷ்மீரா மீது ஒரு தலை காதலுடன் இருக்க பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். ஆனால் காஷ்மீராவின் அப்பா தன்னுடைய மகளை ஒரு துபாய் மாப்பிள்ளைக்கு தான் கொடுப்பேன் என உறுதியாக இருக்க கடைசியில் ஜீவா காஷ்மீரா சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் காமெடி கலந்த கதைக்களம்

கே.எஸ்.ரவிக்குமாரின் நடிப்பு படத்திற்கு தேவையான அளவு அமைந்திருப்பது சிறப்பு. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வி.டி.வி கணேஷிற்கு ஒரு தரமான கதாபாத்திரம், நகைச்சுவை கலந்து அதை ரசிக்கும் படியாக செய்து அசத்தியிருக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடைய கலகலப்பான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சிவா மனசுல சக்தி படத்துக்கு பிறகு பழைய ஜீவாவை இந்த படத்தில் பார்க்கலாம் என உறுதியாக சொல்லும் அளவுக்கு நடித்து அசத்தியுள்ளார்‌.

ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் காமெடி காட்சிகளால் போர் அடிக்காத பொழுதுபோக்கு படமாக பாஸ் மார்க் வாங்கியுள்ளது.