“AOT″ – Movie Review – “ஆகாயத்தில் ஒரு தாரகை” திரைவிமர்சனம்

8

விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற கனவைக் கொண்ட கிராமத்துப் பெண் கல்பனாவின் வாழ்க்கைப் போராட்டத்தை அறிவியல் பின்னணியில் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’.

இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிறு வயதிலிருந்தே விண்வெளி மீது ஆர்வம் கொண்ட கல்பனாவுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெறுவதால் அவரது கல்வியும் கனவும் தடைபடுகின்றன. ஆனால், மனைவியின் லட்சியத்தைப் புரிந்துகொள்ளும் கணவர் கிருஷ்ணா, அவரது கனவை நனவாக்கத் தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார். பல்வேறு தடைகளையும் பொருளாதாரச் சிக்கல்களையும் கடந்து கல்பனா தனது லட்சியத்தை அடைந்தாரா என்பதே படத்தின் கதை.

AOT - Official Trailer

சாத்விகா வீரவல்லி தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கனவு, ஏமாற்றம், தன்னம்பிக்கை எனப் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். துல்கர் சல்மான் வழக்கமான ஹீரோ பிம்பத்தைத் தவிர்த்து, மனைவியின் கனவுக்குத் துணை நிற்கும் அன்பான கணவராக மனதில் பதிகிறார். ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றனர்.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும், சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராக்கெட் உருவாக்கம் தொடர்பான காட்சிகள் பாராட்டுக்குரியவை.

AOT Malayalam Movie Theatre Reactions: Heartwarming 2026 Experience

பெண் கல்வி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கைத்துணையின் ஆதரவு என நல்ல கருத்துகளை அறிவியல் பின்னணியில் சொல்லியிருப்பது படத்தின் சிறப்பு. அதேநேரத்தில், முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, சில ஆவணப்படத் தன்மையிலான காட்சிகள், கணிக்கக்கூடிய திருப்பங்கள் ஆகியவை பலவீனம்.

மொத்தத்தில், கனவுக்கு உயிர் கொடுக்கும் திரை காவியம் என்றே சொல்லலாம்,ஒரு பெண்ணின் கனவுக்கு கணவன் துணையாக நின்றால் எத்தகைய சாதனையையும் நிகழ்த்த முடியும் என்பதை நெகிழ்ச்சியாகச் சொல்லும் நம்பிக்கையூட்டும் ஃபீல் குட் திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’.

AOT (2026) - Cast, Reviews & Showtimes - District

ஆகாயத்தில் ஒரு தாரகை – பெண்ணின் கனவுக்கு சிறகளிக்கும் நெகிழ்ச்சியான பயணம்!