Joe Movie Review – ஜோ திரைவிமர்சனம்

91

ரியோ ராஜ் மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஹீரோ ஜோவும், ஹீரோயின் சுஜியும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர்.

கல்லூரி படிப்பு முடிந்து இருவரும் அவரவர் ஊருக்கு சென்று விடுகின்றனர். ஆனால் காதல் அப்படியே தொடர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வருகிறது.

பெற்றோர் கல்யாணம் செய்துவைக்க முடிவுஎடுத்ததால் காதல் தோல்வியால் நாயகி மாளவிகா தற்கொலை செய்து கொள்கிறார்.

ரியோ ராஜ், விரக்தியில் குடிக்கு அடிமையாகிறார். அவரது மனநிலையை மாற்ற, இன்னொரு நாயகி பவ்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர், பெற்றோர்.

ரியோவுக்கோ காதல் தோல்வியில் இருந்து மீள முடியாத விரக்தி. பவ்யாவுக்கோ அவரது இளம் வயதில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்.

ஒரு கட்டத்தில், இரண்டு பிரச்சினைக்கும் தீர்வு காண களம் இறங்குகிறார் ரியோ…

ரியோ ராஜ் சிறந்த நடிப்பின் மூலம் ஒரு நல்ல நடிகர் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். இவருடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மாளவிகா மனோஜ். இரண்டாம் பாதியில் வரும் நாயகி பவ்யாவும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சித்து குமார் இந்த படத்தில் சிறப்பான இசையை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார் அதேபோல் பின்னணி இசையையும் பல இடங்களில் சிறப்பாக செய்திருக்கிறார்.. ராகுல் ஒளிப்பதிவு  சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காதலை மையமா வைத்து பல திரைப்படங்கள் வந்துருந்தாலும் ஒரு சிலப்படங்களே காலத்திருக்கும் அழியாத காதல்காவியமாக இருக்கும் அந்தகாவியத்தில் ஜோ-விற்கு இடமிருக்கும்