Parking Movie Review – பார்க்கிங் திரைவிமர்சனம்

169

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவரது நடிப்பில் பார்க்கிங்

நடிகை இந்துஜா, ரவிச்சந்திரன், எம் எஸ் பாஸ்கர், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இக்கதையினை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்
இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்சாம் சிஎஸ் இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஸ்ரீநிஷ் தயாரித்துள்ளனர்.

சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது மனைவி இந்துஜாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஹிந்துஜா கர்ப்பமாக இருக்க புதிதாக ஒரு வீட்டிற்கு குடி பெயர்கின்றனர். இவர்கள் மாடி வீட்டில் வசிக்கின்றனர். அந்த வீட்டின் கீழ் வீட்டில் அரசு ஊழியரான எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மற்றும் மகளுடன் 10 வருடங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். கர்ப்பமாக உள்ள தனது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல சிரமமாக இருப்பதால் ஒரு புது காரை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண்.

அதனை வீட்டில் நிறுத்தும் போது அவருக்கும் எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனை பின்னாலில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கும் படம் தான் பார்க்கிங்

அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதல் படத்திலேயே நான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். அற்புதமான காட்சி சிறந்த நடிகர் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தை தாங்கி பிடிப்பது படத்தில் நடித்துள்ள நடிகர்கள் தான். சாக்லேட் பாய் போல படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் சிறிது வில்லனிஷம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோபக்கார இளம் வயது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவரது மனைவியாக வரும் இந்துஜா ஒரு கர்ப்பிணி பெண்ணாக ரசிக்க வைக்கிறார். மிக அழகாக உள்ளார்.
கிளைமாக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம்.

எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு பிரமாதம் ஓய்வு பெறப் போக அரசு ஊழியராக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் இப்படத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்
எட்டு தோட்டாக்கள் படத்திற்கு பிறகு பார்க்கிங் படத்தின் மூலம் அவருக்கு நிறைய விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது. நிறைய இடங்களில் டயலாக்குகள் இல்லாமல் தனது கண்களாலேயே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

பார்க்கிங் படத்தில் ஹீரோ வில்லன் என்ற ஒரு நிலையில் கதையை நகராமல் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஈகோவால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை படம் பேசுகிறது. இதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி.

சென்னை போன்ற நகரங்களில் வாழ்பவர்களுக்கு இத்திரைப்படம் ஒரு உதாரணம் ஏனென்றால் அனைவரது வாழ்க்கையிலும் இத்திரைப்படம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையை சந்திக்காமல் யாரும் வாழ்ந்திருக்க முடியாது அதுதான் பார்க்கிங்.

கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு பார்க்கிங்கால் இந்த அளவிற்கு பிரச்சனை வருமா என்றும் யோசிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் அது போன்ற காட்சிகளும் உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.