“Sandakari” Movie Review – “சண்டக்காரி” திரைவிமர்சனம்

8

லண்டனில் உயர் பதவியில் இருக்கும் ஸ்ரேயா, தனது விசா பிரச்சினையால் சி.இ.ஓ பதவியை இழக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். இதிலிருந்து தப்பிக்க, நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்துகொள்வது போல் நடிக்க திட்டமிடுகிறார். ஆனால், விமலோ ஸ்ரேயாவுக்கு எதிராகவே திட்டம் போட, இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்களும், தமிழகப் பயணமும் தான் ‘சண்டக்காரி’யின் கதை.

Sandakari - Official Trailer

விமல் வழக்கமான தனது பாணியிலேயே கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார். ஸ்ரேயா, கோபமும் திமிரும் கொண்ட பெண்ணாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரபு, உமா பத்மநாபன், புன்னகை பூ கீதா, சத்யன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்களது பங்களிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.

Sandakari Official Trailer | Latest Sandakari Trailers

லண்டன் மற்றும் தமிழக கிராமத்தின் பின்னணியை ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு அழகாக பதிவு செய்துள்ளது. அம்ரிஷின் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ற வகையிலும் உள்ளது.

இயக்குநர் ஆர்.மாதேஷ் காதல், காமெடி, குடும்ப சென்டிமென்ட் என கமர்ஷியல் அம்சங்களை கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார். ஸ்ரேயா–விமல் கதாபாத்திரங்களுக்கிடையேயான காதலை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.

Sandakari (2026) - Cast, Reviews & Showtimes - District

லண்டன் பின்னணி, கிராமத்து காட்சிகள், காமெடி மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து ஒரு எளிமையான பொழுதுபோக்கு படமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

‘சண்டக்காரி’ – கமர்ஷியல் கலவையில் காதலும் காமெடியும்