“Beep ” Movie Review – “பீப்” திரைவிமர்சனம்

5

ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் அதன் பின்னணியில் நடந்த சம்பவங்களை அறியும் வித்தியாசமான சக்தி கொண்ட எம்.பி.ஏ மாணவர் ராகவ், பாலியல் தொழிலாளியான யாமினியின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையை கண்டுபிடிக்க முயல்வதே ‘பீப்’ படத்தின் கதை.

அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் நாயகனின் அதிசய சக்தியை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்தியிருப்பது படத்தின் பலம். ராகவ் ரங்கநாதன் தனது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். குறிப்பாக, காவல்துறையுடன் போட்டி போடும் வகையில் அவர் மேற்கொள்ளும் விசாரணை கவனம் பெறுகிறது. யாமினி லக்‌ஷ்மணன், எல்.சண்முக சுந்தரம் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் கிளுகிளுப்பான காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது கதையின் கிரைம் திரில்லர் தன்மையை சற்று குறைக்கிறது,ஆனால் இரண்டாம் பாதியில் கொலையாளியை ஆதாரத்துடன் எப்படி நெருங்குகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி திரைக்கதை மீண்டும் வேகம் பெறுகிறது.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் கதையின் எல்லைக்குள் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. நம்புவதற்கு கடினமான ஒரு சக்தியை அறிவியல் அடிப்படையில் விளக்கி, அதை கொலை வழக்குடன் இணைத்திருக்கும் இயக்குநர் எல்.சண்முக சுந்தரத்தின் முயற்சி சுவாரஸ்யமானது.

அறிவியல் கற்பனை அம்சத்துடன் கூடிய கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பார்க்க விரும்புபவர்களுக்கு ‘பீப்’ ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைகிறது.

‘பீப்’ – அறிவியலும் கிரைமும் கலந்த திரில்லர்