“Drones” Movie Review – “டிரோன்ஸ்” திரைவிமர்சனம்

48

அழகி, சூனியக்காரி, அறிவியல் ஆராய்ச்சி, காதல் எனப் பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து, நகைச்சுவையுடன் சமூகப் பிரச்சினைகளையும் பேச முயன்றிருக்கும் திரைப்படம் ‘டிரோன்ஸ்’. வித்தியாசமான கதைக்களமும், சுவாரஸ்யமான திருப்பங்களும் படத்திற்குப் பலம்

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே.தீபக் ஆகியோர், பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே தங்குவதற்காக ‘பிளாக் ஹோல்’ அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு சென்ற அவர்கள் வெளியேற முடியாத சூழல் உருவாகிறது. டிரோன் மூலம் அழகிய இளம் பெண்ணான சித்தி இத்னானியைப் டிராவிட் பார்க்கிறார் அவரைப் பார்த்ததும் காதல் மலர்கிறது.

Drones (2026) - Cast, Reviews & Showtimes - District

சித்தி இத்னானியின் அழகில் மயங்கும் பலர், அழகுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்து என்ன.? உண்மையை தெரிந்த பிறகு காதலிக்க மறுபவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதிக்கதை.

பெண்ணின் பாட்டியான தேவதர்ஷினி சூனியக்காரியாக இருக்கும் அவர், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு செய்கிறார். இதற்கிடையே காணாமல் போன கல்லூரி மாணவர்களைத் தேடி வரும் போலீஸ் சதீஷும், சித்தி இத்னானியின் அழகில் மயங்கி காதல் வயப்படுகிறார்.

சூனியக்காரி பாட்டி கதையை, அறிவியல் கற்பனையுடன் இணைத்து புதிய கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத். பறக்கும் தட்டு, அறிவியல் ஆராய்ச்சி, காதல், நகைச்சுவை எனப் பல அம்சங்களை இணைத்திருப்பது கதைக்கு வித்தியாசமான பின்னணியை உருவாக்குகிறது. Drones - Official Trailer

குரேஷி வரும் காட்சிகளும் சிரிப்புக்கு பஞ்சமில்லை,சித்தி இத்னானி, தனது அழகாலும் மர்மமான தோற்றத்தாலும் கவனம் ஈர்க்கிறார்.டிராவிட் செல்வம், தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துஇருக்கிறார், தேவதர்ஷினி, சிறப்பான நடிப்பால் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறார். சினிமாவாலா சதீஷ்,ஆர்.ஜே. தீபக் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், கதையின் மர்மச் சூழலுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். ஹரி எஸ்.ஆர். இசையில் பாடல்கள்,பின்னணி இசை கூடுதல் பலம், படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, மற்றும் கலை இயக்குநர் ஆகியோரின் பங்கு படத்திற்கு கூடுதல் பக்கபலமாக இருந்தது.

Drones Movie Review: An Interesting Idea That Deserves Better Executionமொத்தத்தில், ‘டிரோன்ஸ்’ புதுமையான,பொழுதுபோக்கு, நகைச்சுவை,சமூக அக்கறை கொண்ட ரசிகர்கள் ஒருமுறை ரசிக்கக்கூடிய படமாக இது அமைகிறது.

‘டிரோன்ஸ்’ – சிரிக்க வைக்கும் முயற்சியில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், சிந்திக்க வைக்கும் கருத்துடன் பறக்க முயலும் ஒரு கலகலப்பான கற்பனைக் கதை