“Black Gold″ – Movie Review – “பிளாக் கோல்டு” திரைவிமர்சனம்

63

கோயில்களில் நேர்த்திக்கடனாக வழங்கப்படும் தலைமுடிக்குப் பின்னால் இருக்கும் பல கோடி ரூபாய் வியாபாரம், மாஃபியாக்கள் மற்றும் தொழில் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் “பிளாக் கோல்டு”.

ரூ.5 கோடி மதிப்பிலான தலைமுடி சரக்குடன் ஆந்திரா செல்லும் லிவிங்ஸ்டன் திடீரென மாயமாக, அவரைத் தேடி களமிறங்கும் மகன் வெற்றி, தலைமுடி வியாபாரத்தின் பின்னணியில் இருக்கும் மர்மங்களையும் மாஃபியாக்களையும் எதிர்கொள்வதே படத்தின் கதை.

தமிழ் சினிமாவுக்குப் புதுமையான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் தீரன் அருண்குமார், அதை கிரைம் மற்றும் ஆக்‌ஷன் திரில்லராகக் கொடுத்திருக்கிறார். தலைமுடி ஏற்றுமதிக்குப் பின்னால் இருக்கும் வியாபாரப் போட்டிகள், மாஃபியாக்கள் குறித்த தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், பழக்கப்பட்ட திரைக்கதை மற்றும் கிளிஷே காட்சிகள் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு அதிகரிப்பது படத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.

வெற்றி இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். லிவிங்ஸ்டன், துளசி ஆகியோர் அனுபவ நடிப்பை வழங்க, பிரியலயா குறைவான காட்சிகளிலேயே அழகாக வந்து செல்கிறார். அபிராமி வெங்கடாச்சலம் கம்பீரமான காவல்துறை அதிகாரியாகவும், அருள் டி. சங்கர், ஏ. வெங்கடேஷ் ஆகியோர் வில்லத்தனத்திலும் கவனம் பெறுகின்றனர். கராத்தே வெங்கடேஷின் காட்சிகள் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பைச் சேர்க்கின்றன.

சந்தோஷ் குமார் வீராசாமியின் ஒளிப்பதிவும், கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

மொத்தத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத தலைமுடி வியாபாரத்தின் பின்னணியை வித்தியாசமாகப் பதிவு செய்திருந்தாலும், இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைந்திருந்தால் சிறப்பான அனுபவமாக இருந்திருக்கும். புதுமையான கதைக்களம், பழக்கப்பட்ட திரைக்கதை என ‘பிளாக் கோல்டு’ புதுமையான அனுபவம்

“பிளாக் கோல்டு” – வித்தியாசமான கதைக்களம், புதுமையான திரை அனுபவம்