“Bethlehem Kudumba Unit” Movie Review – “பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைவிமர்சனம்

14

வயது வித்தியாசத்தைத் தாண்டி மலரும் காதலை, நகைச்சுவையும் உணர்வுகளும் கலந்து சொல்ல முயன்றிருக்கிறது “பெத்லகேம் குடும்ப யூனிட்”. நிவின் பாலி தனது நுட்பமான நடிப்பால் கதையின் உணர்வுகளை நன்றாக சுமந்திருக்கிறார். மமிதா பைஜுவின் குறும்புத்தனமும் இயல்பான நடிப்பும் படத்திற்கு இளமைத் துடிப்பை கொடுக்கிறது.

Bethlehem Kudumba Unit :: TicketMaster.lk

நிவின் பாலி தனது கதாபாத்திரத்தின் தயக்கம், வெட்கம், காதல், மீண்டும் ஒரு காதல் தோல்வியை எதிர்கொள்ளும் வலி என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி படத்தை தன் தோளில் சுமக்கிறார். மமிதா பைஜுவின் குறும்பும் சுட்டித்தனமும் கதைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. இருவரின் கெமிஸ்ட்ரியும் படத்தின் முக்கிய ஈர்ப்பு.

Bethlehem Kudumba Unit box office: Nivin-Mamitha film off to a strong start

சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஷ்ணு விஜய்யின் இசையும், அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவும் காதல் உணர்வுகளுக்கும் கதைக்களத்துக்கும் கூடுதல் அழகு சேர்க்கின்றன. ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் படத்தொகுப்பும் கதையை சீரான வேகத்தில் நகர்த்துகிறது.

Bethlehem Kudumba Unit box office collection: Nivin Pauly, Mamitha Baiju's Malayalam rom-com movie opens on decent note, earns Rs 4.70 crore in India - The Economic Times

கதை மிகவும் எளிமையானது ஆனால் அதில் ஒரு அழகான காதல் நட்பு குடும்பம் என்று ஒரு  சுவையை கலவையானதந்திருக்கிறார் இயக்குனர், காதல் மற்றும் வயது வித்தியாசம் சார்ந்த உணர்வுகளை ஆழமாக மனதில் பதியும்படி காட்சி அமைப்புகளை இயக்குனர் அழகாக வடிவமைத்திருக்கிறார்.

சீரியஸான காதல் கதையை கனமாக சொல்லாமல், நகைச்சுவையோடும் மனதைத் தொடும் உணர்வுகளோடும் நகர்த்தியிருப்பது படத்தின் பெரிய பலம்.

Girish AD reveals premise of Bethlehem Kudumba Unit, starring Nivin Pauly and Mamitha Baiju

மொத்தத்தில், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்றால் சிரிக்கவும், ரசிக்கவும், சில இடங்களில் உணரவும் வைக்கும் ஒரு எளிமையான காதல் குடும்பப் பொழுதுபோக்கு படம் “பெத்லகேம் குடும்ப யூனிட்”.