“Hit List” Movie Review – “ஹிட் லிஸ்ட்” திரைவிமர்சனம்

190

இயக்குனர் கேஸ் ரவிக்குமார்  தயாரிப்பில்  இயக்குனர் விக்ரமன் அவரது மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாயிருக்கும் படம் “ஹிட் லிஸ்ட்” அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன். இப்படத்தை இயக்கியுள்ளனர். நடிகை சித்ரா, சரத்குமார், சமுத்திரக்கனி, சுருதி வெங்கட், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா மிக நன்றாக நடித்துள்ளார் தந்தை இயக்குனர் விக்ரமன் பெயரை காப்பாற்றி உள்ளார் என்று கூறலாம்,சரத்குமார் காவல் அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார், சமுத்திரகனி ஒரு தந்தையாக வாழ்ந்துள்ளார்,கௌதம் வாசுதேவ் மேனன் கதாபாத்திரம் நன்றாக உள்ளது.

அனைவர் மத்தியிலும் நல்ல பெயரை சம்பாதித்து மிகவும் நல்லவர் என்ற பெயருடன் வாழும் நாயகனின் அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் கடத்துகிறான்? கடத்திய மர்மநபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான்.

அந்த முகமூடி அணிந்த மர்மநபர் யார்? அந்த மர்மநபர் எதற்கு சைவ உணவை மட்டுமே உண்டு, சிறு எறும்பைக் கூட கொல்லக்கூடாது என்று வாழும் கொள்கை கொண்ட நாயகனை கொலை செய்யச் சொல்கிறான்? அந்த முகமூடி அணிந்த மர்மநபரிடம் இருந்து எப்படி நாயகன் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார்? நாயகனுக்கும், முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையே நடக்கும் அந்த யுத்தத்தில் நாயகனை மீட்டு, குற்றவாளியை எப்படி கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி சரத்குமார்? இதற்கெல்லாம் காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்கிறது “ஹிட் லிஸ்ட்”

விஜய் கனிஷ்கா விரைவில் தளபதி விஜய் இடத்தையே பிடிப்பார்,முதல் படத்திலே இயக்குனர் பையன் நடிப்பிற்கு பஞ்சமா என்கிற அளவிற்கு நடித்துக்காட்டியிருக்கிறார்,சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய விருந்து.