“தி அக்காலி” சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படம்
நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் நடிகர் தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஜெயக்குமார், சாமி சித்தா, சேகர், யாமினி, வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்,இயக்குனர்முகமத் ஆசிப் அஹமத் இயக்கியுள்ளார்.

சாத்தானை வழிபடும் குழுவினர், அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி தெரிய வருகிறது.

உயர் அதிகாரி தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும் ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம விசயங்கள் நடைபெறுகிறது. இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்கிறார் என்பதை சொல்வதோடு, மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், கமா போட்டு தொடர்வது தான் “தி அக்காலி”படத்தின் கதை.

காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல அதிர்ச்சிகமரான உண்மைகள் தெரிய வருகிறது.

நரபலி அது போன்ற விஷயங்களை திரைப்படம் மூலம் காட்டியுள்ளனர்,இந்த காலகட்டத்தில் அமானுஷ்யங்கள் இருக்கிறது என்பதை திரைப்படம் கூறுகிறது, அமானுஷ்யங்கள் காட்சிகள் நன்றாக அமைத்துள்ளனர்,சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக திரைப்படம் அமைந்துள்ளது.